Tamil Cinema News | சினிமா செய்திகள்
56000 திரையரங்கில் வெளிவரும் ரஜினி படம்.. அதுவும் எந்த நாட்டில் தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படம் வெற்றி பெற்றது. இந்த படம் உலக அளவில் சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வெளியானது.

பிரம்மாண்டமாய் வெளிவரும் ரஜினி படம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படம் வெற்றி பெற்றது. இந்த படம் உலக அளவில் சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வெளியானது. இப்பொழுது சீனாவில் திரையிட உள்ளனர்.
2.O படம் சீன மொழியில் 3D, 2D என இரண்டு தொழில்நுட்பத்தில் இந்த படம் வெளிவர இருக்கிறது. மேலும் இந்த படம் சீனாவில் மிகப் பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இதற்கு முன் வெளிவந்த ரஜினிகாந்த் படம் அனைத்தும் சீனாவின் நன்றாக ஓடியது.
இப்பொழுது அதிசயம் என்னவென்றால் சீன மொழியில் 56000 திரை அரங்குகளில் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. அதில் 47 ஆயிரம் திரையரங்குகளில் 3d காட்சிகளில் வெளிவரும். 9000 திரையரங்குகளில் 2d காட்சிகள் வெளிவரும் என செய்திகள் வந்துள்ளது.
மிக அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளிவர இருப்பதால் இந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமான அளவில் வசூல் செய்யும் என தயாரிப்பில் தரப்படும் எதிர்பார்க்கின்றனர்.
