காந்தாரா பட வெற்றியால் 500 கோடிக்கு மேல் லாபம்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த தயாரிப்பாளரின் செயல்

சமீப காலமாகவே கன்னட படங்கள் திரை உலகில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. கே ஜி எஃப் பட தயாரிப்பாளர் ஆன ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார். 

இதில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா வெறும் 12 கோடியில் ஆரம்பித்து இந்தப் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. கே ஜி எஃப் என்னும் பெரிய வசூல் சாதனை படைத்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். ஆனால் காந்தாரா படத்தை மிக சாதாரணமாகவே வெளியிட்டார். அவரே எதிர்பார்க்காத அளவிற்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உலக அளவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

Also Read: ராஜமௌலி, ரிஷப் ஷெட்டி பார்த்து கத்துக்கோங்க.. விக்ரம், சுகாசினியை வறுத்தெடுக்கும் திரையுலகம்

இதுவரை எந்த தயாரிப்பாளர்களும் செய்யாத ஒரு செயலை காந்தார பட  தயாரிப்பாளரும் ஹீரோவும் ஆன ரிஷப் ஷெட்டி செய்துள்ளார். பொதுவாகவே தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படங்களின் மூலம் அதிகம் லாபம் பார்த்து வருகின்றனர். ஆனால் அந்த லாபத்தினை அடுத்ததாக எந்த படத்தில் முதலீடு செய்யலாம் என்ற நோக்கத்திலேயே குறியாக இருப்பார்கள். 

இவர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக காந்தாரா படத்தின் மூலம் கோடிக்கணக்கில் லாபத்தை ரிஷப் ஷெட்டி பார்த்துள்ளார். அதனை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் தனது மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு செயல் திட்டத்தினை தொடங்கியுள்ளார்.

Also Read: காந்தாரா பட ரிஷப் ஷெட்டியின் கூட்டணியில் இணையும் விக்ரம் பட ஏஜென்ட்.. அனல் பறக்கும் அடுத்த பட அப்டேட்

இதனைத் தொடர்ந்து தனது சொந்த மாநிலத்திலேயே 100 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கியுள்ளார் . அதில் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இலவச கல்வியை வழங்க திட்டமிட்டுள்ளார். தயாரிப்பாளர்களில் இந்தியாவிலேயே இவர்தான் ஃபர்ஸ்ட் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதுவும் இதனை இவர் மட்டுமல்லாமல் இவரின் மனைவியே இதனை முன் நின்று செயல்படுத்தி வருகிறார். இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதனைப் பார்த்த சிலர் கோடிகளில் லாபம் பார்க்கும் சினிமா துறையினரை இனிமேலாவது இவரை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் என்பது போல் கூறி வருகின்றனர்.

Also Read: காந்தாரா பட வெற்றியால் தலைகால் புரியாமல் ஆடும் ரிஷப் ஷெட்டி.. பட வாய்ப்பை நிராகரித்து ஆணவப் பேச்சு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்