அந்த காமெடி நடிகர் அறிமுகம் ஆனது எம்ஜிஆர் காலத்தில் தான். நல்ல திறமை புது வித டயலாக் பாணி அங்க அசைவுகளில் ஒரு ஸ்டைல் என சின்ன கேரக்டர் என்றாலும் அதை தனது ஸ்டைலில் அசத்திவிட்டுப் போவார்.

என்னத்த சொல்லி..என்னத்த பண்ண.. இந்த வசனம் பேசி தியேட்டர்களில் விசில் பறந்ததால் இவருடைய பெயர் என்னத்த கண்ணையா என்று மாறியது.

அப்படியும் இவரின் சோகம்,வறுமை வாழ்க்கை மாறவே இல்லை. கம்பெனி கம்பெனியாக ஏறி அலைந்தார். யாரும் பெரிய கேரக்டர் கொடுக்கவில்லை. பசியும் பட்டினியுமாக ரோடுகளில் சுற்றினார். யாருமே கருணை காட்டவில்லை. வாய்ப்புகள் இன்றி நாற்பது ஆண்டுகள் ஓடிவிட்டது.

ஆனால் நம்பிக்கை மட்டும் இழக்காமல் வாய்ப்புகளை தேடியபடியே இருந்தார். வடிவேலு மூலம் அந்த அதிசயம் நடந்தது.

வரும் ஆனா வராது. டயலாக் இவரை உலகம் முழுக்க பாப்புலர் ஆக்கியது. குவிந்தது படங்கள். ஆனால் விதி சிரித்தது. எந்த இலட்சியத்திற்காக வாழ்க்கை முழுக்க பசியோடு சுற்றினாரோ.. அந்த பசியைப் போக்க செல்வம் இருந்தது..

ஆனால் வயது இல்லை..ஆம் ஒரு இரவில் ஹார்ட் அட்டாக் வந்து பரிதாபமாக இறந்து போனார்.