சினிமா கை கொடுக்காததால் போதை ஆசாமியாக மாறிய 5 இளம் நடிகர்கள்.. சிம்பு பிரண்டுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சினிமா எல்லோரையும் தூக்கி விடும் என்று சொல்ல முடியாது. சினிமாவில் உச்சாணிக் கொம்புக்கு போனவர்களும் இருக்கிறார்கள், நடுநிலை நடிகர்களும் இருக்கிறார்கள், ஒன்றுமே இல்லாமல் போனவர்களும் இருக்கிறார்கள். அப்படி சினிமாவில் ஒன்றுமே இல்லாமல் போன நடிகர்கள் மதுவுக்கு அடிமையாகி கேரியரை தொலைத்து முழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இளம் வயதிலேயே கேரியரை தொலைத்த 5 நடிகர்களை பார்க்கலாம்.

பாய்ஸ் பட புகழ் மணிகண்டன்: முதல் படமே பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம்தான். அந்த படம் ஓரளவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடித்த இளைஞர்கள் எல்லோரும் பெரிய அளவில் பேசப்பட்டனர். அதில் நடித்த மணிகண்டன் மட்டும் அதன்பின் 1-2 படங்கள் நடித்தாலும் அவருக்கு சினிமா கைகொடுக்கவில்லை. இப்பொழுது சினிமாவை நம்பி வாழ்க்கையை தொலைத்தேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

அங்காடி தெரு மகேஷ்: இவர் அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ஹீரோ அந்தஸ்து கிடைத்தது. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் கைகொடுக்கவில்லை. இவரும் அதன் பின்னர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி கேரியரை கேள்விக்குறியாக்கி விட்டார்.

களவாணி படம் விமல்: இவர் முதல்படமே செம ஹிட். அதன்பின்னர் இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ஒரு தயாரிப்பாளர் இவர் மீது பணமோசடி புகார் கொடுத்துவிட்டார், அதிலிருந்து இவர் பெயர் கெட்டுப் போனது. அதிகமாக குடித்ததால் இவருக்கு உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறதாம்.

மகத்: சின்ன சின்ன கேரக்டர்கள் பண்ணி சினிமாவில் தனக்கென ஒரு பெயர் எடுத்தவர் மகத். வருங்காலத்தில் பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகத் படவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார். சிம்புவின் வளர்ச்சியில் ஏற்றம் இறக்கம் இருக்கும் போது கூடவே இருந்து தூக்கி விட்ட நண்பன் மகத் என்பது கோலிவுட் வட்டாரத்திற்கே  தெரியும்.

துள்ளுவதோ இளமை அபினை: தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்தவர் அபினை. அதன்பின்னர் ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை இப்பொழுது படவாய்ப்புகள் இல்லாமல் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்