செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக் பாஸில் நுழையும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. ரணகளமாக போகும் வீடு

Bigg Boss Season 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இப்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் நுழைந்த நிலையில் இப்போது ஒவ்வொருவராக வெளியேறி 15 போட்டியாளர்கள் மீதம் இருக்கின்றனர்.

ரவீந்தர், தர்சா குப்தா போன்றோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஐந்து வையல் கார்டு போட்டியாளர்கள் நுழைய இருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்க உள்ளது.

தீபாவளி விழாவை ஒட்டி பிக் பாஸில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது. அந்த வகையில் இன்று விஜய் சேதுபதி பட்டு வேஷ்டி சட்டையில் கலக்கலாக வந்திருக்கிறார். அதோடு எதிர்பார்க்காத வையல் கார்டு என்ட்ரியும் இருக்க உள்ளது. அதன்படி மாடல் அழகியான வர்ஷினி வெங்கட் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்.

பிக் பாஸில் நுழையும் 5 போட்டியாளர்கள்

இதைத்தொடர்ந்து நடிகர் ராணவ் பிக் பாஸ் வீட்டில் களம் இறங்க இருக்கிறார். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சி எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற மஞ்சூரி கலந்து கொள்கிறார்.

அதோடு மற்றும் ஒரு விஜய் டிவி ப்ரோப்பர்டி ஆன டி எஸ் கே பிக் பாஸ் சீசன் 8 வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறிய ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களால் வீடு ரணகளமாக போகிறது. எப்போதும் இல்லாதவாறு திடீரென ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவது சற்று கலக்கத்தை ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதி இதை எவ்வாறு கையாளுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News