நிஜ ஹீரோக்களையே மிஞ்சிய 5 வில்லன்கள்.. விஜய், அஜித் பட வில்லனுக்கு இப்படி ஒரு குழந்தை மனசா

பொதுவாகவே சினிமாவில் ஒரு படத்தில் எந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நெகட்டிவ் ரோலில் நடிப்பவர்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் கொடூர அரக்கனாகவே ஆகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் திரை வாழ்க்கையைக் தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கலையே மிஞ்சும் அளவிற்கு பல்வேறு நற்பண்புகளை கொண்டு திகழ்ந்து வருகின்றனர். அப்படியாக நிஜ ஹீரோக்களையே மிஞ்சிய 5 வில்லன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

டேனியல் பாலாஜி: தமிழில் காக்க காக்க, வட சென்னை, வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில், அசுரன் போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தவர் தான் டேனியல் பாலாஜி. இப்படியாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது அம்மாவின் ஆசைக்காக ஆவடியில் ஒரு அம்மன் கோவிலை கட்டி அதற்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தியுள்ளார். 

Also Read: ஹீரோக்களை கதறவிட்ட டேனியல் பாலாஜியின் 5 படங்கள்.. அமுதனாக உலக நாயகனையே பதறடித்த வில்லன்.

சோனு சூட்: சினிமாவில் அதிக அளவில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக வலம் வந்தவர்தான் நடிகர் சோனு சூட். இதனைத் தொடர்ந்து தமிழில் 1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர், நெஞ்சினிலே போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதிலும் சினிமாவில் பன்முக திறமைகளைக் கொண்டு விளங்கும் இவர் சூட் தொண்டு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

சாய் தீனா: சினிமாவில் துணை வேடங்களில் நடித்து பின்னர் கமலஹாசனின் விருமாண்டி திரைப்படத்தில் சிறை வார்டனாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எந்திரன், தெறி, வடசென்னை போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் 2018 ஆம் ஆண்டு வெளியான திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் தனக்கே உண்டான பாணியில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்நிலையில் சாய் தீனா தினமும் ஆதரவற்ற ஏழைகளுக்கு பசியாறும் வகையில் குறைந்தது 100 பேருக்காவது உணவு வழங்கி வருகிறார்.

Also Read: ஏழை மக்களுக்கு உதவி செய்ய சொத்தை அடமானம் வைத்த பிரபல நடிகர்.. 10 கோடிக்கு கடன் வாங்கி விட்டாராம்!

வித்யூத் ஜம்வால்: சினிமாவில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் வித்யூத் ஜம்வால். மேலும் ஹிந்தியில் வெளியான போர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் பில்லா 2, துப்பாக்கி போன்ற திரைப்படங்களில் டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் வித்யூத் ஜம்வால் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

ஜெகபதி பாபு: சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் என டாப் ஹீரோக்களின் படங்களில் மாஸ் காட்டி வருபவர் தான் நடிகர் ஜெகபதி பாபு. மேலும் தெலுங்கு படங்களில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்பொழுது தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும் தமிழில் விஜய்யுடன் பைரவா, அஜித் உடன் விசுவாசம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் படிப்பதற்கு தேவையான உதவியினை செய்து வருகிறார்.

Also Read: சோத்துக்கே சிங்கி அடிக்கிறாரா அஜித், விஜய் பட வில்லன்? வைரலாகும் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்