Connect with us
Cinemapettai

Cinemapettai

பயனுள்ள 5 ஆண்டிராய்டு ஆப்கள்! டெக்பேட்டை

top 5 android app

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பயனுள்ள 5 ஆண்டிராய்டு ஆப்கள்! டெக்பேட்டை

ஆண்டிராய்டு பயன்பாட்டாளர்கள்தான் உலகளவில் அதிகமாக உள்ளனர். அந்த அளவிற்கு அந்த OS தனது பயனாளர்களின் வசதியை முழுமையாக கவனத்தில் கொண்டு மிக எளிமையாக மொபைல் போன்களை கையாளுவதற்காக தினம் தினம் தன்னை மேம்படுத்திக்கொண்டே வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆண்டிராய்டு மொபைல்களில் கோடிக்கணக்கான இலவச மற்றும் கட்டண ஆப்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. அவற்றுள் அன்றாட பயன்பாடிற்கு உகந்த சில ஆப்கள் உங்கள் பார்வைக்கு.

1. Gravity Screen

இனி உங்கள் பவர் பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்த தேவையில்லை. இந்த ஆப் உங்களுக்கு தேவையான பொழுதில் மொபைலை on செய்யவும் off செய்யவும் பயன்படுகிறது. பலவித சென்சார் வசதிகள் கொண்டு நீங்கள் உங்கள் மொபைலை பாக்கெட்டில் வைத்திருக்கும் போதும், ஸ்க்ரீன் கீழாக இருக்கும் படி வைத்திருக்கும் போதும் மேலும் உங்கள் வசதிக்கேற்ப எப்பொழுது on செய்ய வேண்டும் எப்பொழுது off செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

2. Pixel Icon Pack

Custom launcher பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலின் அத்தனை ஐகான்களையும் உங்களுக்கு விருப்பமான launcher மூலம் மாற்றிக்கொள்ள முடியும், அந்த வகையில் இந்த Pixel Icon Pack உங்களுக்கு ப்ரிமியம் எக்ஸ்பீரியன்ஸ் ஐகான்களை தரவல்லது.

3. MK Explorer

மொபைல் பயன்பாட்டில் பெரிய தலைவலி கோப்புகளை கையாளுவதுதான். தரவிறக்கம் செய்த கோப்புகள், நேரடிக்கோப்புகள், பகிரப்பட்ட கோப்புகள், தேவையற்ற கோப்புகள் என்று அனைத்தையும் எளிமையாக கையாள இந்த ஆப் உங்களுக்கு வழிவகை செய்யும். இதை பயன்படுத்தி கோப்புகளை அதன் வகைவாரியாக நீங்கள் சேமித்துக் கொள்ள இயலும். மேலும் தேவையற்ற ஜன்க் கோப்புகளை இதன் மூலம் தனியே பிரித்தெடுத்து நிரந்தரமாக உங்கள் மொபைளிலிருந்து அழித்துவிட முடியும்.

4. S Player

கிட்டத்தட்ட MX Playerல் உள்ள அனைத்து வகையான வசதிகளையும் கொண்ட வீடியோ பிளேயர். MX playerல் அடிக்கடி நம்மை தொந்தரவு செய்யும் விளம்பரங்கள் இதில் கிடையாது. இதன் ஒரே குறைபாடு MP3 பாடல்களை இந்த பிளேயர் மூலம் இயக்க இயலாது.

5. VidCompact

ஒரு 100MB கோப்பை அதிகபட்சம் எவ்வளவு கம்ப்ரஸ் செய்ய இயலும்? 2MB என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆச்சர்யம் என்றாலும் இந்த ஆப் அதைத்தான் செய்கிறது. இதனை கொண்டு எவ்வளவு பெரிய வீடியோ கோப்பையும் Convert செய்யவும் Compress செய்யவும் முடியும். 50% வரை நீங்கள் வீடியோக்களை compress செய்யும் போது அதன் தரம் குறைவதில்லை. மேலும் இந்த ஆப் கொண்டு ஒரே நேரத்தில் பல வீடியோ கோப்புகளை Convert செய்யவும் Compress செய்யவும் முடியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top