வில்லியாக மிரட்டிய 5 நடிகைகள்.. அதிலும் ராஜமாதா நடிப்பு அசத்தல்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ள நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் சில நடிகைகள் துணிச்சலாக வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதில் வெற்றி கண்டுள்ளார்கள். அவ்வாறு வில்லியாக மிரட்டிய ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.

ஜோதிகா : சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இப்படத்தில் ஜோதிகா கீதா கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றது.

ரீமா சென் : சிம்பு, நயன்தாரா, ரீமாசென் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லவன். பள்ளிப்பருவத்தில் இருந்தே சிம்பு மீது அதீத காதல் வைத்திருக்கும் ரீமாசென் காதலால் பல தவறுகள் செய்கிறார். அதன்பிறகு மன நோயாளியாக இருக்கும் ரீமா சென்னின் நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

திரிஷா : தனுஷ், திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் கொடி. இப்படத்தில் அரசியல் பதவிக்காக எதையும் செய்ய துணியும் பெண்ணாக ருத்ரா கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார். திரிஷாவின் இந்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஸ்ரீயா ரெட்டி : விஷால், ரீமாசென், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. திமிர் பிடித்த கட்டப்பஞ்சாயத்து பெண்ணாக இப்படத்தில் ஸ்ரீயா ரெட்டி நடித்து இருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர் மத்தியில் வியப்பில் ஆழ்த்தியது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ரம்யா கிருஷ்ணன் : ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவை நேருக்கு நேராக காதலிக்கும் நீலாம்பரி, காதலை நிராகரித்த அவமானத்தால் மிகுந்த கோபம் அடைகிறார். படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்