அக்கட தேசம் வாரி வழங்கிய 5 பொக்கிஷமான நடிகர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தில் சூப்பர் ஸ்டார்

தமிழ்நாட்டில் பிறந்த நடிகர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதை விட, அக்கட தேசத்தில் வந்த பொக்கிஷமான 5 நடிகர்களை ரசிகர்கள் இன்றும் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் கர்நாடகாவில் இருந்து வந்த ரஜினி தற்போது அசைக்க முடியாத நடிகராக சினிமாவில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி: கர்நாடகாவின் ஒரு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்த ரஜினியை, இயக்குனர் பாலச்சந்தர் படத்தில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்து, குணச்சித்திர நடிகர் வில்லனாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து தற்போது சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் கர்நாடகாவில் பெங்களூர்.

 அர்ஜுன்: கர்நாடகாவில் உள்ள தும்கூர் என்னும் மாவட்டத்தை சேர்ந்த மதுகிரி என்னும் இடத்தினை பிறந்த இவர், புரூஸ்லீயின் அதிதீவிர ரசிகர். ஆகையால் புரூஸ்லீயின் சண்டை காட்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அர்ஜுன், பின்னாளில் கோலிவுட்டில் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சங்கர் குரு என்ற படத்தில் அறிமுகமானார். பெரும்பாலும் அதிரடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடம் ஆக்சன் கிங் அர்ஜுனாக வலம் வந்தார்.

Also Read: அசால்டாக ஒரு கோடி கொடுத்த கமல்.. காசு இல்ல உழைப்பை தரேன் என ஒதுங்கிய ரஜினி

மோகன்: இவரும் ரஜினியைப் போல் கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரில் பிறந்தவர். மைக் மோகன் என அழைக்கப்படும் இவர், பாலு மகேந்திராவின் முதல் படமான கோகிலா என்னும் கன்னட படத்தில் நடித்து அதன் பிறகு தமிழில் மூடுபனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் 90-களில் டாப் நடிகராக தமிழ் சினிமாவை கலக்கியவர்.

முரளி: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில் கன்னட நாயகன் முரளி, கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தார். கதிர் இயக்கத்தில் வெளியான இதயம் படத்தின் மூலம் ஒருதலை காதலை சொல்ல முடியாமல் தவித்து, அப்போதைய இளைஞர்களின் கனவு நாயகனாக மாறினார். அதன் பிறகு பல குடும்பக் கதை களம் கொண்ட படங்களில் நடித்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Also Read: ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த ஆணையம்.. தெளிவாக தெரியாமல் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு

பிரகாஷ் ராஜ்: இவர் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என ஆல்-ரவுண்டராக தமிழ் சினிமாவை கலக்கியவர். பின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் அவதாரம் எடுத்தார். கர்நாடகாவில் பிறந்த இவர் பெரும்பாலும் துணை நடிகராக பல படங்களில் நடித்தார். இவருக்கு காஞ்சிவரம் படத்திற்காக 2007 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியை இயக்கப்போகும் 3 டைரக்டர்கள்.. படு பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார்

இவ்வாறு இந்த 5 நடிகர்களும் கர்நாடகாவில் பிறந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்றே உயிரைக் கொடுக்கும் அளவுக்கு சினிமாவெறியர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்