உலக சினிமாவுக்கு அவதார் என்றால், இந்திய சினிமாவுக்கு பாகுபாலி என கூறும் அளவுக்கு ஒரு புதிய பெஞ்ச்மார்க் உருவாக்கியுள்ளது ராஜமௌலியின் பாகுபலி-2 படம்.

இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் மறுத்தனர் என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். யார் அந்த நடிகர்கள் என பார்ப்போம்.

ஸ்ரீதேவி: சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு முதலில் ராஜமௌலி ஸ்ரீதேவியை தான் அணுகினாராம், ஆனால் அவர் மறுத்தபிறகுதான் ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

சோனம் கபூர்: அவந்திகா ரோலில் நடிக்க சோனம் கபூரை ராஜமௌலி அணுகியபோது, எனக்கு அந்த ரோல் ஒத்துவராது என மறுத்துவிட்டார். பின்னர் தமன்னா படத்தில் கமிட்டானார்.

ஹிரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம்: ஹிந்தி பதிப்பில் ஜான் ஆபிரகாம், ஹிரித்திக் ரோஷனை நடிக்கவைக்க முதலில் திட்டமிட்டாராம் ராஜமௌலி, அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டார் ராஜமௌலி. பின்னர் படம் டப் செய்யப்பட்டு வெளியானது.

நயன்தாரா:

பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த தேவசேனா ரோலுக்கான வாய்ப்பு முதலில் நயன்தாராவுக்கு தான் கிடைத்ததாம், ஆனால் தேதிகள் ஒதுக்கமுடியாத காரணத்தால் அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வலம்வந்துகொண்டிருக்கிறது.