திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் திரில்லரான 5 படங்கள்.. கண் அழகால் பேராபத்தை கொடுத்த ராட்சசன்

5 thriller movies: வெள்ளித்திரையில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்களை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்கும் வகையில் அதில் உள்ள காட்சிகள் நம்மளை ஈர்க்கும். அந்த வகையில் திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாக சில படங்கள் மீண்டும் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

பயத்துடனே பார்க்க வைக்கும் படங்கள்

ஊமை விழிகள்: அரவிந்த்ராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்தி, ஜெய்சங்கர், அருண்பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் 1986 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை விட வேற எந்த படமும் பெஸ்ட் சைக்கோ த்ரில்லர் படம் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஊமை விழிகள் திகில் நிறைந்த காட்சிகளுடன் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான இசையுடன் மூன்று மணி நேரம் படத்தை ரசிக்கும் படியாக நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஹோட்டலுக்கு வரும் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதை பத்திரிக்கையாளர்கள் தற்கொலை என்று சொல்லிய நிலையில் ஒரு நிபுணர் மட்டும் அது கொலைதான் என்று கண்டுபிடிக்கும் விதமாக கதை நகரும். அந்த வகையில் ஹோட்டலுக்கு வரும் பெண்களின் கண் விழிகளுக்கு மயங்கிப் போன ஒருத்தர் மர்மமான முறையில் பெண்களை கொலை செய்து விடுவர். இவருக்கு உதவும் வகையில் ஊர் கிழவி தகவலை கொடுப்பார். இதை கண்டுபிடிக்கும் விதமாக விஜயகாந்த் அவருடைய நடிப்பை பிரமாதமாக கொடுத்திருப்பார்.

24 மணி நேரம்: மணிவண்ணன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு மோகன், சத்யராஜ், நளினி, நடிப்பில் 24 மணி நேரம் ஒரு திரில்லர் படமாக வெளிவந்தது. இப்படத்தில் சத்யராஜ், என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கீர்களே என்று தொடர்ந்து பெண்களை கொடுமைப்படுத்தி அட்டகாசம் செய்வார். இவரால் பாதிக்கப்பட்ட மோகன் இவரை பழிவாங்கும் விதமாக 24 மணி நேரத்தில் கெடுவைக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் பதபத வைக்கும் அளவிற்கு திரில்லர் ஆக இருக்கும்.

ராட்சசன்: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க சீரியல் கில்லர் மற்றும் சைக்கோ கில்லர் வைத்து கதை நகரும். அந்த சைக்கோ மர்மமான முறையில் செய்யும் கொலைகளை கண்டுபிடிக்கும் விதமாக எதிர்பார்க்காத திருப்பங்களை வைத்து அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும்.

நடுநிசி நாய்கள்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சமீரா ரெட்டி, வீரா நடிப்பில் நடுநிசி நாய்கள் திரைப்படம் வெளிவந்தது. தாயில்லாமல் வளரும் ஒரு சிறுவன் தந்தை செய்யும் அக்கிரமத்தை பார்த்து வளர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார். பின்பு பக்கத்தில் இருக்கும் மீனாட்சி என்பவரால் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பையன் வரம்பு மீறி நடந்து கொள்வார். இதனால் எதிர்பாராத விதமாக மீனாட்சி உயிர் போய்விடுகிறது. சைக்கோ கேரக்டராக இருக்கும் வீரா தொடர்ந்து பெண்களை கடத்திக்கொண்டு அவர்களை துன்புறுத்தி அதை பார்த்து சந்தோஷப்படும் விதமாக சைக்கோ படமாக இருக்கும்.

தீரன் அதிகாரம் ஒன்று: எச். வினோத் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக ஒவ்வொரு காட்சிகளும் நகரும். அதாவது தனியாக இருக்கும் வீட்டை நோக்கி கொள்ளையடிக்கும் கும்பல்கள் நோட்டமிட்டு அந்த வீட்டிற்குள் புகுந்து பணம் கொள்ளை மற்றும் அவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் விதமாக தொடர்ந்து சம்பவங்கள் ஏற்பட்டே வரும். இதை கண்டுபிடிக்கும் விதமாக கார்த்திக் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னணியில் இருக்கும் சஸ்பென்ஸ் பார்ப்பவர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்.

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்

Next Story

- Advertisement -