வாத்தி சொதப்பிய 5 விஷயங்கள்.. தெலுங்கு படமா, தமிழ் படமா.? பாவம் இயக்குனரே கன்பியூஸ் ஆயிட்டாரு

சமீபத்தில் வந்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. நல்ல கருத்தை சொல்கிறது என்று சிலரும், படம் பாடம் எடுப்பது போல இருக்கிறது என்று ஒரு தரப்பும் கூறுகிறது. இந்த படத்தில் ஒர்க் ஆகாமல் போன சிலவற்றை இங்கே காணலாம். இரு மொழிகளுக்கு சேர்த்து படம் எடுக்கும்போது சில பிரச்சனைகள் உண்டு.

இரு மாநில, மொழி பேசுவோருக்கு என்று சில அடையாளங்கள் உண்டு. அவர்களுக்குள் தனித்துவம் உண்டு, அதனால் ஒரு சாராருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல இருப்பது தவிர்க்க முடியாமல் போகும். அப்படி சிலவற்றை இங்கே காணலாம்.

தமிழுக்கு பரிச்சியம் இல்லா முகங்கள்: வாத்தியார், மாணவர்கள் போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் பல கதாபாத்திரங்கள் வருவது  வாடிக்கை. அப்படி வரும் துணை பாத்திரங்கள் நமக்கு அந்நியமாக இருப்பது இந்த படத்தின் முக்கிய பிரச்சனை. தனுஷின் மாணவர்களாய் வருபவர்களில் கென் கருணாஸ் தவிர்த்து ஒருத்தர் கூட தமிழ் முகமாய் இல்லை. பாகுபலியில் நடித்த சில நடிகர்கள் இதிலும் இருப்பது தெரிகிறது.

Also Read: வாத்தி படத்தின் 2வது நாள் வசூல்.. கோடிகளை வாரி குவிக்கும் தனுஷ்

பாடம் எடுக்கும் வாத்தியார்: சாட்டை, ராட்சசி போன்ற படங்கள் தமிழில் ஏற்கனவே வந்து செய்த அதே தவறை இந்த படமும் செய்துள்ளது. காட்சிகளை விசுவலாக காட்டாமல் கிளாஸ் எடுப்பது போல அறிவுரை கூறுவது ‘பூமர்’ வேலை போல உள்ளதை மறுக்க முடியவில்லை.

டீடைல் மிஸ்ஸிங்: கமல்ஹாசன், வெற்றிமாறன், லோகேஷ் போன்ற இயக்குனர்களின் படங்களில் டீடெய்ல் இருக்கும். சில நொடிகளே வரும் காட்சிகளுக்கு கூட அதிகம் மெனக்கெடுவார்கள். இவர்கள் அந்த அளவுக்கு இல்லாமல், ஏனோ தானோ என்று எடுத்து வைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு வேலூர் மாணவர்கள் ஓட்டி வரும் வாகனங்கள் கோவை பதிவு எண் கொண்டுள்ளது, தனுஷ் வீட்டிற்கு அருகில் ஒட்டி இருக்கும் அருணாச்சலம் பட போஸ்டர் 6 மாசம் ஆனபிறகும் கிழக்காமல் அப்படியே இருக்கு, கடப்பா காலெக்டரை பார்க்க பைக்கிலேயே செல்வது போன்றவை. இன்னும் நிறைய இருக்கு.

Also Read: தாய் தந்தையரை சொர்க்கத்தில் வாழ வைக்கும் வாத்தி.. திருடா திருடி பட இயக்குனரின் சிலிர்ப்பூட்டும் பதிவு

வில்லத்தனமே பண்ணாத வில்லன்: தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு நன்கு அறிமுகமான விலானனான சமுத்திரக்கனியை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட வில்லத்தனம் செய்யவில்லை. அப்பப்போ வந்து பில்டப் மட்டும் கொடுத்துவிட்டு, ஏதாவது செய்வார் என்று பார்த்தால் ஒன்றும் செய்யாமல் போகிறார்.

நெஞ்சை நக்கும் காட்சிகள்: படத்தில் அங்கங்கே இருக்கும் அதிகப்படியான செண்டிமெண்ட் காட்சிகள். ஒரே சீனில் ஊரே திருந்துவது, வாத்தியார் சொன்னவுடனே அனைவரும் 80% மேல வாங்குவது என்று கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள். முக்கியமாக இறுதியில் வரும் அந்த பாரதியார் கெட்டப் நம்மளை நிச்சயம் சிரிப்பை வரவழைக்கிறது. படம் ஓரளவுக்கு ரசிக்கும்படி செய்வது தனுஷ், கென் போன்றோரின் நடிப்புதான். பொறுத்திருந்து பாப்போம் படத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று.

Also Read: கருத்து கேட்டு கருத்துபோன ப்ளூ சட்டை மாறன்.. தனுஷ் வாத்தியை வச்சி செய்து விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்