சுஜாதாவின் வசனங்களால் புரட்டிப் போட்ட 5 முக்கியமான படங்கள்.. சங்கர் தோற்பதற்கு இவரும் ஒரு காரணம்

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய வாழ்க்கையை நாவல்கள் மட்டும் தொடர்கதைகள் எழுதுவதன் மூலம் ஆரம்பித்த இவர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்றோரின் கற்பனைகளை கதை வடிவில் கொண்டு சேர்த்தவர் தான் இவர். ஷங்கரின் பல படங்களுக்கு இவர் வசனம் எழுதி இருக்கிறார். இவரின் மறைவுக்குப் பிறகு ஷங்கரின் படங்களில் வசனங்கள் அந்த அளவுக்கு அழுத்தமாக இல்லாமல் போனதும் அவருடைய படங்கள் எடுபடாமல் போனதற்கு காரணமாக இருக்கிறது. பல படங்களில் தன்னுடைய திறமையான வசனங்களின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ரோஜா: இயக்குனர் மணிரத்னத்தின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ரோஜா திரைப்படத்தின் வசனகர்த்தா சுஜாதா தான். இதனால்தான் இந்த படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழுத்தமாக இருந்தது. அரவிந்த்சாமி மற்றும் மதுபாலாவின் காட்சிகளாக இருக்கட்டும், அரவிந்த்சாமி தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பிறகு வரும் நாட்டுப்பற்று குறித்த வசனங்களாக இருக்கட்டும் அத்தனையுமே வித்தியாசமாகவும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததாகவும் அமைந்தது.

Also Read:வசூல் சாதனை படைக்கும் சோழர்கள்.. பொன்னியின் செல்வன் 2 கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்

முதல்வன்: இயக்குனர் ஷங்கர் அன்றைய காலகட்டத்தில் ரொம்பவும் தைரியமாக அரசியல் கதைகளத்தை கொண்டு எடுத்து திரைப்படம் தான் முதல்வன். இந்த படத்திற்கு அனல் பறக்கும் வசனங்களை எழுதியது சுஜாதா தான். அதிலும் முதலமைச்சராக இருக்கும் ரகுவரனை பேட்டி எடுக்கும் அர்ஜுனனின் காட்சியில் வரும் வசனங்கள் எல்லாம் இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

இந்தியன்: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் இந்தியன். சுஜாதா ஏற்கனவே கமலஹாசனின் வெற்றி படமான விக்ரம் படத்திற்கும் இவர் தான் வசனம் எழுதியிருந்தார். இந்தியன் படத்தில் ஊழல் மற்றும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு நிதர்சனமான உண்மைகளை வசனமாக எழுதியிருப்பார்.

Also Read:இளம் குந்தவை இந்த சீரியல் நடிகையின் மகளா.? குடும்பத்துடன் வைரலாகும் புகைப்படம்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் : இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வித்தியாசமான கதை அமைப்பில் வெளியான திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்னும் நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த படம். காதல் மற்றும் கவிதை நிறைந்த இந்த படத்திற்கு சுஜாதா தான் வசனம் எழுதியிருந்தார்.

ஆய்த எழுத்து: இளைஞர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சமூக விழிப்புணர்வு திரைப்படம் தான் ஆய்த எழுத்து. இந்த படத்தில் அரசியல், வன்முறை, காதல் என அத்தனையும் கலந்து இருக்கும். இளைஞர்களும் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதை கட்டாயப்படுத்திச் சொன்ன இந்த படத்தின் வசனத்தை எழுதியவரும் சுஜாதா தான்.

Also Read:பொன்னியின் செல்வன் வெற்றியால் 20 படத்தில் கமிட்டான நடிகர்.. திரும்பவும் மார்க்கெட்டை உயர்த்திய மணிரத்னம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்