சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த 5 சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள்.. மனோபாலா கொடுத்த அந்த சூப்பர் ஹிட்

தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி படங்கள் இந்த காலத்தில் மட்டுமல்ல அப்பொழுதே மிக விறுவிறுப்பான கதையுடன் கூடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். அதிலும் வச்ச கண்ணை வாங்காமல் பார்க்கும் அளவிற்கு சஸ்பென்ஸ் ஆகவும், திரில்லர் படமாகவும் மிரள வைத்திருப்பார். அப்படிப்பட்ட அவர் படங்களை பற்றி பார்க்கலாம்.

ஆயிரம் ஜென்மங்கள்: இயக்குனர் துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, விஜயகுமார், பத்மப்ரியா, லதா மற்றும் விகே ராமசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது ரஜினியின் தங்கையாக இருக்கும் சாவித்திரிக்கு ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்கும் விதமாக அவர் உடம்பில் பேய் பிடித்து விடுகிறது. அதனால் அவதிப்பட்டு இருக்கும் தங்கையின் நிலைமையை பார்த்து அதில் இருந்து அவரை விடுவிக்கும் விதமாக ரஜினி உதவி செய்வார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பார்க்கவே கொஞ்சம் பயமுறுத்தும் விதமாக இருக்கும்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கழுகு: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு கழுகு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ரதி, தேங்காய் சீனிவாசன், விகே ராமசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் நரபலியை வைத்து மிகவும் கொடுமையாக பார்ப்பவர்களின் மனதில் தீராத வேதனை கொடுக்கும் அளவிற்கு சஸ்பென்ஸ் கலந்து திரில்லர் படமாக வெளிவந்தது. அதனால் பாக்ஸ் ஆபிஸில் படும் மோசமான தோல்வியை சந்தித்தது.

சந்திரமுகி: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது சந்திரமுகியாக இருக்கும் ஒரு ஆத்மா யாருடைய உடம்பில் புகுந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக ஒவ்வொரு கதையும் நகரும் போது மிகவும் எதிர்பார்ப்புடன் கூடி கிளைமேக்ஸ் வரை திரில்லர் கதையாக நகர்ந்து வரும்.

Also read: விஷ்ணு விஷாலை டம்மியாக நடிக்க வைக்கும் ஐஸ்வர்யா.. முழுக்க முழுக்க லால் சலாம் படம் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே

ஊர்க்காவலன்: 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் ஊர்காவலன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ராதிகா, பாண்டியன், ரகுவரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி காங்கேயம் என்ற கேரக்டரில் தன் சகோதரரின் கொலைக்கு நீதி கேட்டு போராடுவதே கதையாக எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் சாமி வாக்கு கொடுத்து இருக்கிறது என்று வில்லன் செய்யும் தவறை பார்ப்பதற்கு பயமாக இருக்கும். இப்படத்தை ரஜினிக்கு ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு மனோபாலா இயக்கிக் கொடுத்திருக்கிறார்.

மூன்று முகம்: ஏ ஜெகநாதன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு மூன்று முகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ராதிகா, சத்யராஜ், செந்தாமரை மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த் அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என மூன்று வித்தியாசமான கேரக்டரை நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இதில் வருகிற ஒவ்வொரு காட்சியும் கண் இமைக்காமல் நம்மளை விறுவிறுப்பாக பார்க்க வைத்திருக்கும். இப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

Also read: கோவக்கார இயக்குனராக மாறிய ஐஸ்வர்யா.. மொய்தீன் பாயுடன் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்