ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெற்றி கண்ட 5 படங்கள்.. அஜித்துக்கு பிள்ளையார் சுழி போட்ட தீனா

ஏஆர் முருகதாஸ் ஒரு வெற்றிகரமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுக்கு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது படத்தில் சமூகத்தின் மீது உள்ள அக்கறை தெரியும். இந்நிலையில் இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் முருகதாஸின் 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

தீனா : ஏஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான படம் தீனா. மேலும் அதுவரை அஜித்தை மென்மையான கதாபாத்திரத்தில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் ஹீரோவாக காட்டிய படம் தீனா தான். இதிலிருந்து அஜித் தல என்று அழைக்கப்பட்டார். மேலும் அஜித்தின் திரை வாழ்க்கையில் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Also Read :அஜித்துடன் இணைந்த தீனா பட நடிகர்.. வெளிவந்த ஏகே 61 ஸ்பெஷல் அப்டேட்

ரமணா : கேப்டன் விஜயகாந்த், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ரமணா. எந்த இயக்குனரும் கையாள பயப்படும் மிகப்பெரிய விஷயத்தை ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தில் எடுத்திருந்தார். அதற்கேற்றார் போல் மக்கள் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க செய்தார்கள்.

கஜினி : சூர்யா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்த வெளியான திரைப்படம் கஜினி. இப்படத்தில் ஏ ஆர் முருகதாஸின் திரைக்கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி கஜினி படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் அமீர்கானை வைத்து ஏஆர் முருகதாஸ் எடுத்திருந்தார்.

Also Read :சர்க்கார் படத்திற்கு பின் சரிவை சந்தித்த ஏஆர் முருகதாஸ்.. தற்போதுவரை மீள முடியாத சோகம்

துப்பாக்கி : விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட படமாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றது.

கத்தி : விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான திரைப்படம் கத்தி. இப்படத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வசனங்கள் வைக்கப்பட்டிருந்து. இதனால் இந்த படம் வெளியாவதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read :ரமணா கதையை ஆட்டையை போட்ட முருகதாஸ்.. அந்த இயக்குனருக்கு உதவி செய்த விஜயகாந்த்

Next Story

- Advertisement -