சகட்டுமேனிக்கு சமீபத்தில் வெயிட் போட்ட 5 நட்சத்திரங்கள்.. தொப்பை குலுங்க குலுங்க வரும் டிஎஸ்பி விஜய் சேதுபதி

ஒரு காலகட்டத்தில் உடல் பருமனாக இருந்த பிரபலங்கள் கூட தற்போது உடல் எடையை குறைத்துள்ளனர். அதாவது குஷ்பூ, பிரபு, சிம்பு ஆகியோர் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கின்றனர். ஆனால் சமீபத்தில் சகட்டுமேனிக்கு 5 திரை நட்சத்திரங்கள் வெயிட் போட்டுள்ளனர்.

மஞ்சிமா மோகன் : மலையாள சினிமாவில் அறிமுகமான மஞ்சுமா மோகன் தமிழில் சிம்புக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் உடல் எடையை அதிகப்படியாக கூட்டி உள்ளார்.

Also Read : ஏய் நீ ரொம்ப குண்டா அசிங்கமா இருக்க.. உருவ கேலிக்கு மஞ்சிமா மோகன் கொடுத்த நெத்தியடி பதில்

நிவின் பாலி : பிரேமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பரிச்சயமானவர் நிவின் பாலி. மலையாள நடிகரான இவர் தமிழில் நேரம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். அடையாளம் தெரியாத அளவுக்கு தன் உடல் எடையை அதிகரித்துள்ளார்.

விஜய் சேதுபதி : விஜய் சேதுபதி ஆரம்ப காலங்களில் தனது படங்களில் கட்டு செட்டான உடல் வாகுடன் நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்துள்ளார். அதுவும் இப்போது வெளியாகியிருக்கும் டிஎஸ்பி படத்தில் தொப்பையும் தொந்தியுமாய் இருக்கிறார் விஜய் சேதுபதி.

Also Read : காத்து வாங்கும் தியேட்டர்கள், அரண்டு ஓடும் ஆடியன்ஸ்.. விஜய் சேதுபதியின் டிஎஸ்பி முழு விமர்சனம்

ஜெயம் ரவி : ஜெயம் ரவி தனது உடம்பை எப்போதுமே ஃபிட்டாக வைத்துக் கொள்ளக் கூடியவர். இவர் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்திற்கு கரெக்டாக இருப்பார். ஆனால் தற்போது உடல் எடையை அதிகரித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இவர் சற்று குண்டாகத் தான் காட்சியளித்திருந்தார்.

மாதவன் : மேடி அதிக பெண் ரசிகர்களை கொண்டவர். இவருடைய தோற்றம், பேச்சு என அனைத்தும் பெண்களை கவரும் படியாக இருக்கும். ஆனால் சில காலங்களில் தனது உடல் எடையை அதிகபடியாக உயர்த்தி உள்ளார் மாதவன். மீண்டும் உடற்பயிற்சி மூலம் உடலை குறைக்க அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Also Read : சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

Next Story

- Advertisement -