சூதாட்ட புகாரில் சிக்கி, இந்திய கிரிக்கெட் அணியின் மானத்தை வாங்கிய 5 நட்சத்திர வீரர்கள்..

இந்திய நாட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றே சொல்லலாம். பெரிய பெரிய தொழில் அதிபர்கள் இந்த விளையாட்டை பயன்படுத்தி நிறைய சம்பாதித்து கொள்கின்றனர். தங்களுக்கென்று ஒரு அணி மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து 20 ஓவர் போட்டிகளை நடத்தி பெரும் பணத்தை மாற்றிக் கொள்கின்றனர்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய புரோக்கர்கள், வீரர்களை அணுகி அவர்களை சூதாட்டப் புகாரில் சிக்க வைத்துள்ளனர். ஒரு சில வீரர்கள் மறுத்தாலும் சில வீரர்களை அவர்கள் தங்கள் சூதாட்ட வலைக்குள் வீழ்த்தி விடுகின்றனர். ஆனால் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அந்த சூதாட்ட கூட்டத்தை ஒழித்துக்கட்டி உள்ளனர்.

அப்படி சூதாட்ட வலையில் சிக்கி தங்கள் கேரியர் மற்றும் பெயரை கெடுத்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள்.

முகமது அசாருதீன்: இவருக்கென்று ஒரு தனி ஆட்டத்திறன் உண்டு. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு முன் இந்திய அணியின் கேப்டனாக நீண்டகாலம் செயல்பட்டவர். 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்தபோது, அந்த அணியின் கேப்டன் ஹன்சி க்ரோன்ஜியை சூதாட்டகாரர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்து பின்னர் நிரூபிக்கப்பட்டதால் வாழ்நாள் தடை பெற்றார் முகமது அசாருதீன்.

Azhar-Cinemapettai.jpg
Azhar-Cinemapettai.jpg

மனோஜ் பிரபாகர்: கபில்தேவ் காலத்தில் விளையாடியவர் பிரபாகர். இவர் நத்தை போல் மெதுவாக விளையாடக்கூடிய ஆல்ரவுண்டர். இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்தார் என  நிரூபிக்கப்பட்டு ஆறு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.

Manoj-Cinemapettai.jpg
Manoj-Cinemapettai.jpg

அஜய் ஜடேஜா: இவர் இந்திய அணியின் கேப்டனான முகமது அசாருதீன்னுடன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டு இவர் 5 ஆண்டுகாலம் கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது என தடை செய்யப்பட்டார்.

Ajai-Cinemapettai.jpg
Ajai-Cinemapettai.jpg

ஸ்ரீசாந்த்: 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 20 ஓவர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார் ஸ்ரீசாந்த். 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர் spot-fixing செய்தார் என குற்றச்சாட்டு எழுந்து சிறைத்தண்டனை பெற்றார்.

Sreesanth-Cinemapettai.jpg
Sreesanth-Cinemapettai.jpg

அஜய் சர்மா: இவர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியும், 31 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் பஸ்ட் கிளாஸ் கேரியரில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.உள்ளூர் வடிவிலான போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றார்.

Ajaisharma-Cinemapettai.jpg
Ajaisharma-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்