இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த 5 சீரியல்கள்.. வந்த வேகத்திலேயே தூள் கிளப்பும் நந்தினி சூர்யா

Serial Trp Rating: ஒவ்வொரு வாரமும் மக்களின் ஃபேவரிட் சீரியல் எது என்பதை அந்த வாரத்தில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் மூலம் கருத்துக்கணிப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் மக்களிடம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் டிஆர்பி ரேட்டிங்கில் எது அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பற்றியும் தற்போது பார்க்கலாம்.

கயல்: கயல் மற்றும் எழிலின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சிவசங்கரி தீபிகாவை வைத்து பிளான் பண்ணி வருகிறார். அந்த வகையில் தீபிகா, எழிலுடன் திருமணத்தை செய்து கொள்ள தயாராகிய நிலையில் கயல் குடும்பத்தை காயப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். இதில் எதிர்பாராத பல பிரச்சனைகள் வரும் நிலையில் எழில் கயல் திருமணம் நடக்குமா என்பதை பார்க்க ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.28 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

மக்களை கவர்ந்த சீரியலாக இடம் பிடித்த மூன்று முடிச்சு

சிங்கப் பெண்ணே: அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வரும் நிலையில் அன்புவின் காதலுக்கு தான் உணர்வுகள் அதிகமாக இருப்பதற்கு ஏற்ப செவரக்கோட்டையில் பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ஆனாலும் மகேஷ் காதலிப்பது ஆனந்தியே தான் என்பது அன்புக்கு தெரிந்து விட்டது. இருந்தாலும் ஆனந்தியே விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத அன்புவின் காதல் கைகூடுமா என்பது பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த வாரம் 8.97 புள்ளிகளை பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: ஆதிரை மற்றும் பிரபுவின் கல்யாணத்தை நிறுத்த பல சதிகள் நடந்தாலும் இருவரும் மனதிற்குள்ளும் காதல் வந்துவிட்டதால் யார் தடுத்தாலும் இவர்களுடைய கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப உறுதியாகிவிட்டது. இந்த வாரம் 8.48 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: முத்து மற்றும் மீனாவின் எதார்த்தமான நடிப்பும், குடும்பம் என்றால் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. ஆனாலும் ரோகிணி பற்றிய விஷயங்கள் எப்பொழுது முத்துவுக்கு தெரியவரும் என்று பார்ப்பவர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரம் 8.46 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு மிகவும் ஃபேவரட் சீரியலாக இடம் பிடித்தது தான். அதுவும் ஒவ்வொரு காட்சிகளும் எதிர்பார்த்தபடி விறுவிறுப்பாகவும் நந்தினி மற்றும் சூர்யாவின் நடிப்பு பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது.

அத்துடன் இவர்களுடைய காட்சி தூள் கிளப்புகிறது என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமான நடிப்புடன் கதை மிக சிறப்பாக அமைந்து வருகிறது. இந்த வாரம் 8.36 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதை தொடர்ந்து இனி அடுத்து வரும் ஒவ்வொரு வாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து முதலிடத்தை பிடித்து விடும்.

- Advertisement -spot_img

Trending News