மரணத்தில் முடிந்த 5 காதல் படங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்திய பருத்திவீரன்

காதல் படங்கள் என்றாலே மன உருக்கத்தை உணர்த்தும் விதமாக அமைந்து விடுகின்றன. மேலும் அப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் கொடுத்து விடுகின்றது. குறிப்பாக எதிர்பார்க்காமல் ஏற்படும் கதை திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அமைந்து விடுகிறது.

கடைசி வரை காதலால் சேராமல் இறப்பை சந்தித்த ஜோடிகளின் கதாபாத்திரம் நம் மனதில் நீங்காத ஒன்றாக நின்று விடுகிறது. அவ்வாறு இறுதியில் மரணத்தை சம்பவித்த 5 காதல் படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

மைனா: 2010ல் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ஹீரோ தன் காதலை எதிர்க்கும் அமலாபாலின் அம்மாவை கொலை செய்யும் முயற்சியில் போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார். அதன்பின் இவர்களின் காதல் கதையை உணர்ந்த போலீசாரும் திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் போலீசாரின் மனைவியின் சந்தேகத்தால், அமலாபாலை துன்புறுத்தியே கொலை செய்து விடுகின்றனர். சிறையில் இருந்து திரும்பி வரும் ஹீரோ தன் காதலியின் சடலத்தை கண்டு மனம் உடைந்து ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது போன்று கதை அமைந்திருக்கும். இறுதியில் இவர்களின் இத்தகைய முடிவு காண்பவரை மெய்சலுக்க வைக்கும் விதமாக அமைந்திருக்கும்.

சேது: 1999ல் பாலாவின் இயக்கத்தில் விக்ரம், அபிதா இப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் ஹீரோ, ஹீரோயினை விரும்பும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். குடும்ப சூழலால் காதலை ஏற்க மறுக்கும் அபிதாவின் முடிவால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் விக்ரம். அதன் பின்னரே காதலை உணர்ந்த காதலி ஹீரோவை சந்திக்க வருகிறார். மேலும் இதை அறிந்த விக்ரம் அபிதாவை காண செல்லும்போது, தன்னால் ஏற்பட்ட துயரத்தை துடைக்க தற்கொலை செய்து கொள்கிறார் ஹீரோயின். அதைக் கண்டு மனம் உருகி புத்தி பேதலித்து திரிகிறார் விக்ரம். இப்படம் காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக இவரின் இழப்பு, காண்பவரை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும்.

Also Read: சுந்தர்சிக்கு வாழ்க்கை கொடுத்த படம்.. முதல் வாரத்துக்குப் பின் பட்டையை கிளப்பிய வசூல்

பருத்திவீரன்: 2007ல் அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பிரியாமணி ஹீரோவை காதலிப்பார். இதை அறிந்த கார்த்தி தன்னை திருத்திக் கொண்டு இவரின் காதலை ஏற்று திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து இருப்பார். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு கூட்டத்தின் அட்டூழியத்தால் சீர்குலைந்து போகிறார் பிரியாமணி. இதை அறிந்து ஹீரோவிடம் தன்னை கொன்று விடுமாறு கூறுகிறார் ஹீரோயின். இத்தகைய காட்சிகள்,காண்போரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் விதமாக அமைந்திருக்கும்.

சுப்ரமணியபுரம்: 2008ல் சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளிவந்த படம் தான் சுப்பிரமணியபுரம். இப்படத்தில் கவுன்சிலரின் மகளான ஹீரோயினை விரும்பும் ஹீரோ எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறும் விதமாக அமைந்திருக்கும். இதை தொடர்ந்து அவர்களின் காதலை விரும்பாது நம்பிக்கை துரோகம் செய்வது போன்று, இறுதியில் காதலியால் அழைக்கப்பட்ட அழகரை கொன்று விடுகின்றனர். இத்தகைய காட்சிகள் காண்போரை மன வேதனைக்கு உண்டு படுத்திருக்கும்.

Also Read: வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

பிதாமகன்: 2003ல் பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விக்ரம், தன்மீது நட்பு கொள்ளும் சூர்யாவிடம் நன்றி உள்ளவராக நடித்திருப்பார். மேலும் போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபடுகிறார் விக்ரம். அவரை அதிலிருந்து மீட்கும் சூர்யா முதலாளியின் சூழ்ச்சியால் கொல்லப்படுவது போன்று கதை அமைந்திருக்கும். இப்படத்தின் இறுதியில் தன் நண்பனின் உடலை அடையாளம் காணும் விக்ரமின் செயல்கள் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்திருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்