கோட் படத்தை தியேட்டரில் பார்க்க 5 காரணங்கள்.? இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே!

Vijay : விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கோட் படத்தை திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்களை இப்போது பார்க்கலாம்.

நட்சத்திர பட்டாளம்

வெங்கட் பிரபு கோட் படத்தில் கதாபாத்திரங்களை சல்லடை போட்டு சலித்து எடுத்துள்ளார். அந்த வகையில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா போன்ற பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

5 கேமியோ கதாபாத்திரங்கள்

கோட் படத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஐந்து கேமியோ கேரக்டர்கள் இடம்பெற்றிருக்கிறது. திரிஷா ஒரு பாடலில் இடம் பெறுகிறார். AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் இடம் பெறுகிறார். மேலும் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, தோனி ஆகியோரும் சிறப்பு காட்சியில் நடித்து உள்ளனர். இது எதிர்பார்க்காத ட்வீஸ்ட் ஆக அமைந்திருக்கிறது.

இரட்டை வேடத்தில் விஜய்

தளபதி விஜய் இதற்கு முன்பு இரண்டு மற்றும் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கோட் படத்தில் அவரது தோற்றம் இரண்டுமே முற்றிலுமாக வேறுபட்டு இருக்கிறது. இதை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

யுவனின் இசை

வெங்கட் பிரபுவின் படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையில் பின்னி பெடலெடுத்து விடுவார். அதுவும் விஜய்க்கு அவர் அமைத்துள்ள பின்னணி இசையை ரசிகர்கள் தியேட்டர் சத்தத்தில் கேட்க கண்டிப்பாக கோட் படத்தை பார்க்க திரையரங்குக்கு வரவேண்டும். ஏற்கனவே இந்த படத்தின் நான்கு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதிரடியான ஆக்சன் காட்சிகள்

கோட் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பிராயன் பேட்டி ஒன்றில் பேசுகையில் விஜய் கோட் படத்தில் அனைத்து ஆக்சன் காட்சிகளும் அவரே நடித்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் கோட் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

மாஸ் காட்டும் விஜய்யின் கோட்

Next Story

- Advertisement -