விரல் வித்தையால் பெருத்த அடிவாங்கிய சிம்புவின் 5 படங்கள்.. எஸ்டிஆர்-இன் கேரியரையே மாற்றிய இயக்குனர்

சினிமா துறையில் வாரிசு நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் சிலம்பரசன். அதிலும் தனது படங்களில் விரல்வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ரசிகர்களுக்கு பெரிய தலைவலியையே ஏற்படுத்தி இருப்பார். இப்படி பெருத்த அடியை வாங்கி வந்த சிம்புவின் கேரியரையை மாற்றியது பிரபல இயக்குனர் தான் என்ற சீக்ரெட் ஆனது தற்பொழுது வெளியாகி உள்ளது.

காதல் அழிவதில்லை: டி ராஜேந்தர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல் அழிவதில்லை. இதில் சிம்பு, சார்மி கவுர், டி ராஜேந்தர், கருணாஸ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ஆனது காதலை மையமாக வைத்து வெளியான திரைப்படமாகும். அதிலும் சிம்பு விரலால் வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஓவராக அலப்பறையை கொடுத்திருப்பார்.

Also Read: இஷ்டத்திற்கு கதையை மாற்றி பிளாப்பான சிம்புவின் 5 படங்கள்.. இன்று வரை கதறும் ராயப்பன்

தம்: ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தம். இதில் சிம்பு உடன் ரக்சிதா, ஆஷிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்பு உயர் அதிகாரியின் மகளை காதலித்து பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் தனது நடிப்பின் மூலம் வித்தை காட்டுவதாக எண்ணி ஓவராக கெத்து காட்டி இருப்பார்.

அலை: விக்ரம் குமார் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அலை. இதில் சிம்பு உடன் த்ரிஷா, ரகுவரன், சரண்யா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் சிம்பு, ஆதி என்னும் கதாபாத்திரத்தில் ஓவர் அலப்பறையை கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றி இருப்பார். மேலும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.

Also Read: சிம்பு பிறந்த நாளுக்கு அஜித், விஜய் அப்டேட்.. இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெஷல் டே ஆக அமையும்.!

குத்து: இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குத்து. இதில் சிலம்பரசன் உடன் ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் தனது காதலை பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி எவ்வாறு வெல்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த படமானதாக அமைந்துள்ளது. அதிலும் சிம்பு இப்படத்தில் தனது விரலின் மூலம் வித்தையை காட்டி தலைவலியையே ஏற்படுத்தி இருப்பார்.  

ஒஸ்தி: தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒஸ்தி. இதில் சிலம்பரசன் உடன் சந்தானம், ஜித்தன் ரமேஷ், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்பு காவல்துறை அதிகாரியாக ஒஸ்தி வேலன் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் போனது.

இப்படியாக சிலம்பரசன் தனது படங்களில் விரலினால் வித்தை காட்டுகிறேன் என்ற பெயரில் ஓவராக அலப்பறையை கொடுத்து பெருத்த அடியையே வாங்கி இருப்பார். ஆனால் அவரின் கேரியரையை மாற்றியது இயக்குனர் ஹரி தான். சிம்பு நடிப்பில் முதல் முதலில் இவரின் இயக்கத்தில் வெளியான கோவில் படத்தில் சிம்பு எந்த ஒரு அலப்பறையையும் காட்டாமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: குண்டாகி அவமானப்பட்ட 5 நடிகர்கள்.. தன்னைத்தானே செதுக்கிய அட்மேன் சிம்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்