Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் எவிக்ஷனில் இருந்து மக்களால் தப்பித்த 5 நபர்கள்.. உச்சக்கட்ட பதட்டத்தில் அடுத்த 5 பேர்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது மக்களால் விரும்பி பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவருகிறது.
இந்த சூழலில் வாராவாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒரு நபர் வீட்டை விட்டு உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் வெளியேற்றப்படுவார்.
அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 11 பேரில், 5 பேர் மக்கள் வாக்களித்த ஓட்டின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டனர்.
மேலும் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சனம் செட்டி எவிக்ஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்றப்பட்டார். அதன்பின் பாலாஜி முருகதாஸ், ரியோ, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் ஆகிய 5 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனவே மீதி இருக்கும் சோம் சேகர், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜித், நிஷா ஆகிய 5 பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற்றப்படுவார்.

bb4-eviction-cinemapettai
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் ரசிகர்களால் எடுக்கப்பட்ட ஓட்டு கணிப்பின் அடிப்படையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுபவர் வேல்முருகன் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
