புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெளுத்து வாங்க போகும் மழை.. மழை காலத்தில் பார்க்க வேண்டிய 5 குட் ஃபீல் படங்கள்

Vijay Sethupathi: அய்யய்யோ, மழை வந்துடுச்சா என்று சலித்துக் கொள்ளும் நாம் தான் சின்ன வயதில் ஒரு முறையாவது அம்மாவுக்கு தெரியாம இந்த மழையில் நனஞ்சிட மாட்டோமான ஏங்கினவங்க. 6 மணிக்கு எல்லாம் எழுந்து டிவியை போட்டு லீவு விடுவாங்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள்.

சூடான பலகாரம் ஏதாவது செய்து கொடுத்தால் சாப்பிட்டு பொழுதை போக்கியவர்கள். இப்போது அதையெல்லாம் ரசிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த கிளைமேட்டில் மிஸ் பண்ணாமல்குட் ஃபீல் கொடுக்க கூடிய இந்த ஐந்து படங்களை மட்டும் பார்த்து விடுங்கள்.

5 குட் ஃபீல் படங்கள்

காதலும் கடந்து போகும் (ஜியோ சினிமா): காதலும் கடந்து போகும்(கககபோ) என்பது நளன் குமரசாமி இயக்கிய ரொமான்டிக் காமெடி திரைப்படமாகும். இந்த படத்தில், இளம்பெண் யாழினி பக்திராஜன் (மடோனா செபாஸ்டின்) என்ற ஒரு ஐ.டி. பணியாளர், வாழ்க்கையில் சுயமாகவும் திருப்திகரமாகவும் இருக்க சென்னைக்கு புதிதாக வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரம். ஆனால், அவள் திடீரென தனது வேலையை இழக்கும்போது, வீட்டுக்கு திரும்பாமல் என்ன செய்வது என்று யோசிக்கிறாள்.

வாழ்க்கையில் அமைதியை பெறுவதற்காக, யாழினி ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை பார்க்கிறாள். மேலும் ஒரு குறைந்த விலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் பக்கம் வசிக்கிறார். அங்குதான் விஜய் சேதுபதியையும் சந்திக்கிறாள். கதையின் மையமாக உள்ள, கதாபாத்திரங்களுக்கிடையேயான அமைதி மற்றும் மகிழ்ச்சியான உறவு, படத்தை பார்க்கும் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்கிறது.

ஹாப்பி டேஸ் (அமேசான் ப்ரைம்): ஹாப்பி டேஸ் என்பது சேகர் கம்முலா எழுதி, தயாரித்து, இயக்கிய ஒரு தெலுங்கு மொழி கமிங் ஆப் ஏஜ் திரைப்படம். இந்த படம், ஒரு பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் 8 நண்பர்களின் கதையைச் சொல்கிறது, அங்கு ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீது தனித்தனி பார்வைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. குழுவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பலவிதமான தன்மை மாற்றங்களை வளர்த்து கொள்வதில் நகர்கிறது இந்த கதை. சுவாரஸ்யம் அதிகம் நிறைந்த படம் இது.

அயலும் ஞானும் தமிழ் (சன் நெக்ஸ்ட்): நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் நடிப்பில் உருவான படம் அயலும் ஞானும் தமிழ். கதை ஒரு மருத்துவமனையில் இருந்து தொடங்குகிறது. பெற்றோரின் விருப்பம் இல்லாமல் பிரித்விராஜ் ஒரு சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் பொழுது அந்த சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் போலீசில் புகார் அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் மருத்துவமனை மீது எந்த தப்பும் வந்து விடக்கூடாது என்பதால் மருத்துவமனை நிர்வாகம் பிரித்விராஜ் கை கழுவி விடுகிறது. பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே பிரித்விராஜ் மருத்துவமனையின் பின் கேட்டு வழியாக வெளியேறி விடுகிறார். அவரை தொடர்ந்து கதையின் நாயகி பின்தொடர்கிறாள்.

அவர் எங்கே போகிறார், அவருடைய ஃப்ளாஷ் பேக். மற்றும் இந்த புகாரிலிருந்து எப்படி காப்பாற்றப்படுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜன் ஃப்ளாஷ் பேக் மனதிற்கு நெருக்கமான பல காட்சிகளோடு அமைந்து நம்மை ஒரு சில இடங்களில் கண்ணீர் சிந்த வைத்திருக்கும்.

காதலில் சொதப்புவது எப்படி: சித்தார்த் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஒரு க்யூட்டான படம். என்றே சொல்லலாம் கல்லூரியில் வரும் காதல். பக்குவம் இல்லாததால் நடக்கும் சண்டைகள். திருமணம் ஆனவர்களின் காதல் வாழ்க்கையை புரிந்து கொண்டு, பின்னர் காதலனுடன் இணைவது என படம் முழுக்க ஒரு பசுமையான நினைவுகளை மனதிற்கு தந்து கொண்டே இருக்கும்.

ப்ரேமம் (டிஸ்னி + ஹாட்ஸ்டார்): மனதிற்குள் இருக்கும் அழகான காதல் நினைவுகளை மீட்டெடுத்து ஒரு முறை சிலாகித்துக் கொள்ள பார்க்க வேண்டிய படம் தான் பிரேமம். படத்தின் பாடல்களை இந்த கிளைமேட்டுக்கு கேட்டாலே மனதிற்கு இதமாகத்தான் இருக்கும். போதாத குறைக்கு மலர் டீச்சர் கேரக்டரில் சாய் பல்லவி, மீண்டும் ஒருமுறை நம் இளமை காலங்களை ஞாபகப்படுத்தி இருப்பார். இந்த படத்தையும் இன் சரியான கிளைமேட்டில் ஒரு முறை பார்த்து விடுங்கள்.

- Advertisement -

Trending News