கதாநாயகர்களாக கலக்கும் 5 இசையமைப்பாளர்கள்.. இசையையே மறந்து நடிப்பில் மூழ்கிய ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்: ஏ ஆர் ரகுமான் அக்கா மகன். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான வெயில் படத்தில், அதனைத் தொடர்ந்து கிரீடம், தலைவா, தாண்டவம், ராஜா ராணி, அசுரன்,சூரரை போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிறந்த இசையமைப்பாளராக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பிலும், இசையிலும் அடங்காதே, சர்தார், வாடிவாசல், ருத்ரன்,யானை,உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

விஜய் ஆண்டனி: காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க பாடல் காக “கேன்ஸ் கோல்டன் லைன்” என்ற விருதை இந்தியாவில் முதல் முறையாக வென்றவர். இவர் அறிமுகமானது சுக்கிரன் திரைப்படம் அதனைத்தொடர்ந்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் 2006ல் வெளியான கிழக்கு கடற்கரை சாலை ஒரு சிறிய வேடத்தில் நடித்து 2012 ல் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக அடித்தார் அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான் பிச்சைக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதித்யா: இவர் தமிழ் சினிமால மிகக் குறைந்த எண்ணிக்கையில் இசை அமைத்திருந்தாலும் சமூக சேவை மூலமும், திரைப்படங்களை வாயிலாகவும் பிரபலமானவர். இவர் ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், கதக்களி, அரண்மனை-2 உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். 2017 இல் வெளியான மீசையமுறுக்கு படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள், சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சித்தார்த் விபின்: இவரும் முதல்முதலா இசையமைப்பது மலையாள திரைப்படமான குறுக்ஷேற்ற 2008 ல். அதன்பிறகு 2012 ல் கலியுகம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமானதும் மலையாள சினிமாவில் மிஷன் 90 நாட்கள். அதற்குப் பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஹலோ நான் பேய் பேசுகிறேன், கதாநாயகன், சர்பத், பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனிருத்: தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இளம் இசையமைப்பாளர். நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட நெருங்கிய உறவினர். தமிழ் சினிமாவில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி எதிர்நீச்சல், விஐபி, கத்தி, காக்கிச்சட்டை, விவேகம், டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து தமிழ்சினிமாவில் கொடிகட்டி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்