ரிலீசுக்கு முன்பே சிக்கலில் மாட்டிய 5 படங்கள்.. இதில் 3 வருடம் கழித்து வந்தம் பிளாப் கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி சில காட்சிகள், கதாபாத்திரங்கள், வசனங்களால் சர்ச்சைக்கு உள்ளாகும். ஆனால் சில படங்கள் வெளியாவதற்கு முன்னாலே பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளது. படத்தின் டைட்டிலில் இருந்து தியேட்டர் கிடைக்காத வரை பல சிக்கலை சந்தித்த படங்களை பார்க்கலாம்.

காவலன்: விஜய்யின் முந்தைய படங்களின் நஷ்டத்துக்கான தொகையை விஜய் தந்தால் மட்டுமே காவலன் படத்தை ரிலீஸ் செய்வோம், இல்லாவிட்டால் காவலன் படத்தை வெளியிட மாட்டோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையைத் செய்தார்கள். இதைத் தொடர்ந்து ஃபைனான்ஸ் பிரச்னை, தியேட்டர் பிரச்னை, தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் பிரச்னை என காவலன் படத்திற்கு அடுக்கடுக்காக பிரச்சனை வந்தது.

தலைவா: டைம் டூ லீட் என்கிற டேக் லைனுடன் தலைவா படத்தின் வெளியீட்டுக்கான அறிவிப்பு வந்தது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பிரச்சினை எழுந்தது. தலைவா படத்தை திரையரங்கில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பயந்தனர். பின்பு, டைம் டூ லீட் என்கிற வாசகம் நீக்கப்பட்டு தலைவா படம் வெளியிடப்பட்டது.

விஸ்வரூபம்: கமலஹாசன் இயக்கி, நடித்திருந்த விஸ்வரூபம் படத்தில் முஸ்லிமை தீவிரவாதிகளாக காட்டியதாக முஸ்லிம் தரப்பில் சர்ச்சைகள் எழுந்தது. இதனால் 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதாக கமல்ஹாசன் கூறியிருந்தார்.

என்னை நோக்கி பாயும் தோட்டா: கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி, தயாரித்து வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் கௌதம் மேனனின் பண நெருக்கடியால் மிகவும் தாமதமாக 2019 இல் வெளியானது.

இன்று நேற்று நாளை: டைம் மிஷினை வைத்து ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்திருக்கின்றது. ஆனால் தமிழில் வந்த முதல் டைம் மிஷின் படம் இன்று நேற்று நாளை. என்ன கதை இது என்று புது டைரக்டர் விமர்சித்து பிரச்சினை செய்தார். பின் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்