fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ராகுல் டிராவிட்டின் உடைக்க முடியாத 5 சாதனைகள்.. தனி ஒருவனாய் சாதித்த பல வெற்றிகள்

RahulVVX-Cinemapettai.jpg

Sports | விளையாட்டு

ராகுல் டிராவிட்டின் உடைக்க முடியாத 5 சாதனைகள்.. தனி ஒருவனாய் சாதித்த பல வெற்றிகள்

டெஸ்ட் போட்டி என்றால் நாம் அனைவரும் நினைவு கொள்வது ராகுல் டிராவிட்டை மட்டும் தான். ராகுல் டிராவிட்டின் ஆட்டத்தை காண ஒரு தனி பட்டாளமே உண்டு. டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சுவர் என அனைவராலும் பாராட்ட கூடியவர்.

கிளென் மெக்ராத், பிரட் லீ, வாசிம் அக்ரம், சோயப் அக்தர், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எளிதாக சமாளித்து விளையாடக் கூடிய ஒரே வீரர் என்றால் அது ராகுல் டிராவிட்,.அப்பேர்ப்பட்ட ராகுல் டிராவிட்டின் அசைக்க முடியாத சாதனைகளை இதில் காண்போம்.

Rahul-Dravid-Cinemapettai1.jpg

Rahul-Dravid-Cinemapettai1.jpg

1. அதிக பார்ட்னர்ஷிப் – மற்றொரு வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பது என்பது ஒரு தனி கலை, பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கிட்டத்தட்ட 88 முறை மற்றவர்களுடன் செஞ்சுரி அமைத்துள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் உடன் மட்டும் 20 பார்ட்னர்ஷிப் சதங்கள் ஆகும்.

SachinDravid1-Cinemapettai.jpg

SachinDravid1-Cinemapettai.jpg

2. 10,000 ரன்கள் 3வது பொசிசனில் – ராகுல் டிராவிட் 3-வது இடத்தில் களம் இறங்கி கிட்டத்தட்ட 10,524 ரன்களை அடித்துள்ளார் . 219 இன்னிங்சில் 28 சதங்களும், 50 அரை சதங்களும் அடித்து 58.88 சராசரியை பெற்றுள்ளார்.

Dravid-Cinemapettai.jpg

Dravid-Cinemapettai.jpg

3. அதிக கேட்ச்சஸ் பிடித்தவர் – கேட்ச்சஸ் வின்ஸ் மேட்ச்சஸ் என்று சொல்லுவார்கள், அந்த வகையில் ராகுல் டிராவிட் ஒரு சிறந்த ஸ்லிப் பீல்டெரும் ஆவார். கிட்டத்தட்ட 210 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக ஸ்பின் பவுலர்கள் என்றால் ராகுல் டிராவிட்டை தான் ஸ்லீப் பில்டராக அமர்த்துவார்கள்.

Dravid-Cinemapettai2.jpg

Dravid-Cinemapettai2.jpg

4. அதிக பந்துகளை சந்தித்தது  – பவுலர்கள் பவுண்டரி லைனில் இருந்து ஓடி வந்தாலும் இவர் அசால்டாக மட்டை போட்டு பவுலர்களை வெறுப்பேற்றுவார். குறிப்பாக பிரட்லி, சோயிப் அக்தர் போன்ற பவுலர்கள் நொந்து போவார்கள். இவர் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 31,258 பந்துகளை சந்தித்துள்ளார்.

5. அதிக நேரம் களத்தில் நின்றது – ராகுல் டிராவிட் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும்கூட அதிக நேரம் களத்தில் நின்ற பெருமையை தன்வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆம் இவர் கிட்டத்தட்ட 44 ,152 நிமிடங்கள் களத்தில் நின்று சாதனை செய்துள்ளார்.

Dravid-Cinemapettai-1.jpg

Dravid-Cinemapettai-1.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top