எந்த படமாக இருந்தாலும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாக இருந்தால் அந்த படத்திற்கு எப்பொழுதுமே தனி சிறப்பு உண்டு.. மர்மங்கள் நிறைந்த கதைகளை வைத்து பார்ப்பவர்களை கண் இமைக்காமல் பயத்தினால் சீட்டின் நுனி வரை அமர வைத்து திரையரங்கையே அதிர வைக்கும் படங்களுக்கு சொல்லவே தேவையில்லை எப்பொழுதுமே வெற்றி தான். அந்த வகையில் மலையாள படங்கள் தற்போது சஸ்பென்ஸ் நிறைந்த படங்களாக ஓடிடித்தளத்தில் கலக்கிக் கொண்டு வருகிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் படங்கள்
Ezra: ஜெய் கே. இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு பிரித்விராஜ், பிரியா ஆனந்த் நடிப்பில் எஸ்ரா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை ஆனது திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் ஒரு பெண் மர்ம பெட்டியை வீட்டுக்கு கொண்டு வருகிறார். பிறகு அந்த மர்ம பெட்டியால் ஏற்படும் பஞ்சாயத்து காரணமாக புதுசு புதுசாக பிரச்சனைகள் உருவாகிறது. கணிக்கவே முடியாத வகையில் சஸ்பென்ஸ் நிறைந்த திகில் காட்சிகளுடன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி கொண்டு இருக்கிறது.
C u soon: மகேஷ் நாராயணன் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு பகத் பாஸில், ரோஷன் மேத்யூ, தட்சிண ராஜேந்திரன் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது வருங்கால மனைவியை தேடும் ஒரு கணவனின் கதையை சுற்றி மர்மங்கள் மற்றும் டுவிஸ்ட் நிறைந்த விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம்.
Forensic: விஷால் ஃப்யூரியா கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ராந்த் மாசி, ராதிகா ஆப்தே நடிப்பில் ஃபோரன்சிக் படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க சீரியல் கில்லர் திரைப்படம் ஆக, யாரு கொலைகளை செய்கிறார் என்று கண்டுபிடிக்காத அளவிற்கு தொடர் கொலைகளை செய்து வரும் சீரியல் கில்லரை தேடும் போலீசை சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. இப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
Nayattu: மார்ட்டின் பிரக்கட் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு போபன், ஜோசூ ஜார்ஜ் நடிப்பில் நயட்டு படம் வெளிவந்தது. காவல்துறையை சேர்ந்த மூன்று பேர், போலீசார் செய்யும் சில மர்மமான விஷயங்களை கண்டுபிடிக்கும் விதமாக இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அடுத்து என்ன நடக்கப்போகிறது யார் என்ன செய்யப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகி இருக்கிறது. இப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாயிருக்கிறது.
Anjaam Pathiraa: மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் கடந்த 20ஆம் ஆண்டு கிரைம் திரில்லர் திரைப்படமாக குஞ்சாக்கோ போபன் நடிப்பில் அஞ்சம் பத்திரா வெளிவந்தது. போலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை விசாரணை செய்யும் குழு உடன் கிரிமினாலஜி துறை செயல்பட்டு அதை கண்டறியும் விதமாக சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளை வைத்து விறுவிறுப்பாக படம் நகரும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் மூலம் பார்க்கலாம்.
- Malayalam Movies: 5 மாதங்களில் 1009 கோடி வசூல்
- Malayalam Movies: சிங்கமும், புலியுமாக அடித்துக்கொண்டு ஹிட் அடித்த 5 மலையாள படங்கள்
- Horror Movies: பயத்தில் உச்சா போக வைக்கும் 5 ஹாரர் படங்கள்