லோ பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த 5 படங்கள்.. குழந்தைகளை குறி வைத்து வசூலை அள்ளிய லாரன்ஸ்

தமிழ் சினிமாவின் நிறைய ஹை பட்ஜெட் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி ரிலீசுக்கு பின்னர் புஸ்வானம் போல் ஒன்றும் இல்லாமல் போயிருக்கின்றன. ஆனால் ரொம்ப லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிறைய படங்கள் கோடிக்கணக்கில் வசூலை அள்ளி இருக்கின்றன. லட்சங்களில் உருவாகி கோடிகளை வாரிய தமிழ் படங்களும் இருக்கின்றன.

லவ் டுடே: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த வசூல் என்றால் அது லவ் டுடே திரைப்படத்தின் வசூல் தான். இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த இளைஞர்களின் வரவேற்பையும் பெற்றது. வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் தயாரித்த இந்த படம் 100 கோடி வசூலித்தது.

Also Read: அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

சுப்ரமணியபுரம்:  இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் மதுரை மாவட்டத்தின் மற்றொரு பக்கத்தை காட்டிய திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இந்த படத்தை சசிகுமார் இயக்கியதோடு முக்கியமான கேரக்டரில் நடித்தும் இருந்தார். இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நெகட்டிவ் ரோல் பண்ணி இருந்தார். 65 லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் 30 கோடி வசூல் செய்தது.

காஞ்சனா 2: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்சின் திகில் சீரிஸ்கள் வரிசையில் வெளியான திரைப்படம் தான் காஞ்சனா 2. லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 18 கோடி. இந்த படத்தின் வசூல் 120 கோடியை எட்டியது.

Also Read: நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

கண்ணா லட்டு தின்ன ஆசையா: இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தின் மறு ஆக்கம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. சந்தானம் மற்றும் பவர் ஸ்டாரின் நகைச்சுவை கூட்டணியில் இந்த படம் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மொத்த வசூல் 50 கோடி.

காஞ்சனா: முனி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த திரைப்படம் தான் காஞ்சனா. திகில் மற்றும் நகைச்சுவை என சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு வித்தியாசமான கேரக்டரில் அசத்தியிருந்தார். 7 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 70 கோடி வசூல் செய்தது.

Also Read: கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்