இன்றுவரை கமலால் மறக்க முடியாத 5 பாடல்கள்.. கமலுக்காக ஸ்ருதிஹாசன் பாடிய அந்தப் பாடல்!

தமிழ் சினிமாவிற்கு உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2011 ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இவர் ஏகப்பட்ட தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பைத் தாண்டி இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் 6 வயதிலிருந்தே தன்னுடைய தந்தை திரைப்படத்தில் பாடிக் கொண்டிருக்கிறார்.

தேவர் மகன்: 1992 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் தனது ஆறாவது வயதில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தைக்காக ‘போற்றி பாடடி பொன்னே’ என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியுள்ளார். இவருடன் சேர்ந்து இந்தப் பாடலை சுந்தர்ராஜன், மனோ, டிகேஎஸ் கலைவாணன் உள்ளிட்டோர் சேர்ந்து பாடியிருப்பார்கள். இந்த திரைப்படம் 5 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருமாண்டி: கடந்த 2004-ம் ஆண்டு கமல்ஹாசன்-அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விருமாண்டி திரைப்படத்தில் கமலஹாசனை வளர்த்தெடுத்தார் பாட்டி இறந்து போகும்போது ஒலிக்கும் ‘மாதவிலக்கு’ என்ற சோகப்பாடலில் பாடலை முழுவதுமாக  கமலஹாசன் பாடியிருப்பார். இந்தப் பாடலைப் பார்க்கும் போதே கண் கலங்க வைக்கும் அளவுக்கு கமல்ஹாசனின் நடிப்பும் குரலும் இருக்கும்.

மகாநதி: சந்தானபாரதி இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு கமலஹாசன்-சுகன்யா நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் ‘ஸ்ரீ ரங்கா ரங்கநாதனின்’ என்ற பாடலை எஸ்பிபி, மகாநதி ஷோபனா, உமா ரமணன் உள்ளிட்டோர் சேர்ந்து பாடியுள்ளனர். தந்தை மகள் இடையே இருக்கும் அழகான பாசப்பிணைப்பை பாடியிருக்கும் இந்தப் பாடல் கமல் நடிப்பில் வெளியான பாடல்களிலேயே தனித்துவமானது.

சகலகலா வல்லவன்: 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ‘இளமை இதோ இதோ’ என்ற பாடலானது 40 வருடங்கள் கழித்தும் புத்தாண்டு சம்பந்தப்பட்ட எத்தனையோ பாடல்கள் வெளிவந்தாலும் கமலஹாசனின் நடிப்பிற்கும் துள்ளல் ஊட்டும் இந்தப் பாடல் ஆனது இன்றும் புத்தாண்டு பிறக்கும்போது பட்டி தொட்டி எங்கும் ஒளிபரப்பாகிறது. இந்த பாடலை எஸ்பிபி, வாலி வரிகளில் பாடியுள்ளார்.

வறுமை நிறம் சிவப்பு: 80-ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். ஏனென்றால் ஸ்ரீதேவி-கமலஹாசன் இருவரும் ஒருவர் ஒருவருக்கு மாறி மாறி புதிர் போடுவது போன்று இருக்கும் இந்த பாடல் இன்றைய தலைமுறைகளையும் ரசிக்க வைக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்