fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கல்யாணம் பண்ணிக்கலாம், ஆனா குழந்தை வேண்டாம்.. கணவர்களை கதறவிடும் 5 பிரபல நடிகைகள்!

deepika-anushka

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கல்யாணம் பண்ணிக்கலாம், ஆனா குழந்தை வேண்டாம்.. கணவர்களை கதறவிடும் 5 பிரபல நடிகைகள்!

பொதுவாக திருமணமானவர்கள் அனைவரையும் பார்த்து சமூகம் கேட்கும் ஒரே கேள்வி ‘குழந்தை எப்போ?’ என்பது தான். இதே சூழ்நிலை தான் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களுக்கும் நிகழ்கிறது.

அந்த வகையில் எந்தத் துறையில் பிரபலமானவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் ரசிகர்கள் முதலில் அவர்களிடம் கேட்கும் கேள்வி பிரக்னண்டா இருக்கீங்களா? என்பதுதான். மேலும் சிலர் ‘அவங்க பிரக்னன்டாக தான் இருக்காங்க’ என்று வதந்திகளையும் பரப்புவது உண்டு.

இது போன்ற கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும் சில நடிகைகள்  நெத்தியடி பதில்களை கொடுத்து ரசிகர்களை வாயடைத்துப் போக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஐந்து முன்னணி நடிகைகள் இது போன்ற கேள்விகளுக்கு, தங்களுடைய ரசிகர்களுக்கு கொடுத்துள்ள பதில்கள் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதற்க்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் சினிமா மட்டும் தான் வாழ்க்கை என்று நினைத்து குழந்தை ஒதுக்கி உள்ளனர். அவ்வாறு நெத்தியடி பதிலளித்து ரசிகர்களை திகைத்த வைத்த நடிகைகளின் லிஸ்ட் இதோ:

பிரியங்கா சோப்ரா: நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவிடம், குழந்தை பெறுவது  பற்றி கேட்டபோது, பிரியங்கா அங்கிருந்த மதுவை குடித்து இருக்கிறார். இதன் மூலம் பிரியங்கா, தான் கர்ப்பமாக இல்லை என்பதை  அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் நேரலையில் உறுதி படுத்திவிட்டார்.

சமந்தா அக்கினேனி: சமந்தா அக்கினேனி, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் ஒரு பிரபலமான பத்திரிக்கையில், ‘சமந்தா பிரக்னன்டாக இருக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பியவாறு வந்ததற்கு, பதிலடியாக சமந்தா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘அப்படியா! அவங்க பிரக்னண்டா? நீங்க கண்டுபிடிச்சா எங்ககிட்டயும் சொல்லுங்க’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தீபிகா படுகோன்: தீபிகா, ரன்வீர் சிங்கை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் தீபிகாவின் ஒரு படத்தின் ப்ரோமோஷன்- இன் போது தீபிகாவின் பிரக்னன்சி பற்றி அவருடைய பிரக்னன்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தீபிகா, ‘என்ன பார்த்தா பிரக்னண்டா இருக்க மாதிரியாயிருக்கு? நான் அவ்வாறு ஒரு முடிவு எடுத்தால் கட்டாயமாக உங்களிடம் அனுமதி வாங்கிக் கொள்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா: அனுஷ்கா ஷர்மா தற்போது  கர்ப்பமாக இருப்பது நாம் அறிந்ததே. இதற்கு முன்பு அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது ‘நான் இப்போது அதில் கவனம் செலுத்தவில்லை’ என்று பதிலளித்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி: கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை ஷில்பா ஷெட்டி மணமுடித்தார். மேலும் ஷில்பா ஷெட்டிக்கு தியான் மற்றும் சமிக்ஷா என்று இரு குழந்தைகள் உள்ளன. 2018 ஆம் ஆண்டு ஷில்பாவின்  இரண்டாவது  குழந்தையைப் பற்றிய வதந்திகள் பரவிய போது, ‘நான் கர்ப்பம் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருடைய இரண்டாவது குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top