Connect with us
Cinemapettai

Cinemapettai

shivaji ganesan rajinikanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவாஜியும், ரஜினியும் கூட்டணி அமைத்த 5 வெற்றி படங்கள்.. நடிக்கவே பயந்த சூப்பர் ஸ்டார்

ரஜினியின் ஸ்டைலும், சிவாஜியின் நடிப்பும் சேர்ந்து படையப்பா படம் தூள் கிளப்பி இருக்கும். ஆனால் ரஜினியும். சிவாஜியும் சேர்ந்து படையப்பாக்கு முன்பே ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள். அந்த படங்களில் சில வெற்றியும் அடைந்து இருக்கிறது.

ஜஸ்டிஸ் கோபிநாத்: 1978 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், KR விஜயா, தேங்காய் ஸ்ரீநிவாசன் நடித்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படத்திற்கு வியட்நாம் வீடு சுந்தரம் கதை எழுதி இருந்தார். MS விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற படங்களில் நடித்து ரஜினி வளர்ந்து கொண்டிருந்த காலம் அது.

Also Read :11 படங்கள் தொடர்ந்து ப்ளாப்.. கவலைப்படாமல் 200-வது படத்தின் மெகா ஹிட் கொடுத்த செவாலியர் சிவாஜி

படிக்காதவன்: இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் படிக்காதவன். இந்த படத்தி ரஜினிக்கு சிவாஜி அண்ணனாக நடித்திருப்பார். பல ஆண்டுகள் பிரிந்து இருக்கும் அண்ணனும் , தம்பியும் சந்திக்கும்காட்சி படு மாஸாக இருக்கும். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

நான் வாழவைப்பேன்: புன்னகை அரசி KR விஜயா தயாரித்து நடித்த படம் நான் வாழவைப்பேன். இந்த படம் ஒரு கிரைம் த்ரில்லர் படம். இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு கொலையை கண்டுபிடிக்க உதவும் சின்ன கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார்.

Also Read :பத்திரிக்கையாளரை ஓட ஓட விரட்டிய ரஜினி.. நல்ல சம்பவம் நடக்கும் போது இப்படியா பண்றது தலைவரே

படையப்பா: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் KS ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், மணிவண்ணன், செந்தில், ரமேஷ் கண்ணா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிக்கு சிவாஜி அப்பாவாக நடித்திருப்பார். சிவாஜிக்கு இது தான் கடைசி படமும் கூட. 210 பிரிண்டுகள் மற்றும் 700,000 ஆடியோ கேசட்டுகள் என இந்த படம் உலகம் முழுதும் திரையிடப்பட்டது.

விடுதலை: 1986 ஆம் ஆண்டு இயக்குனர் K.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இது பாலிவுட் படம் குர்பானியின் தமிழ் ரீமேக்காக வந்தது. ரஜினி, சிவாஜி, மாதவி, விஷ்ணுவர்தன் படத்தில் நடித்திருந்தனர். இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றது.

Also Read :ஓவர் ஆக்டிங் என அப்பட்டமாய் தெரிந்த சிவாஜியின் 5 படங்கள்.. சீரியஸாய் நடித்ததை இப்போது கேலி செய்யும் இளசுகள்

Continue Reading
To Top