5 சரித்திர கதாபாத்திரங்களாக திரையில் வாழ்ந்த சிவாஜி.. மெய் சிலிர்க்க வைத்த கட்டபொம்மனின் வசனங்கள்

Sivaji Ganesan: தமிழ் சினிமா திரையுலகில் நடிப்பின் மாமன்னன் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் சரி நடிப்பின் மூலம் அப்படியே வாழ்ந்து விடுவார். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். இந்த ஐந்து வரலாற்று கதாபாத்திரங்களை நினைத்தாலே சிவாஜியின் முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு இவர் அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்து விட்டார்.

கர்ணன்: மகாபாரதத்தில் எல்லோரையும் கவர்ந்த கேரக்டர் என்றால் அது கர்ணன் தான். அந்த கர்ணனாக சிவாஜி நடித்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இன்று வரை அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலாக இருக்கட்டும், அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப முகபாவனைகளை காட்டும் சிவாஜியின் நடிப்பாக இருக்கட்டும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Also Read:இளம் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்த சிவாஜியின் 5 படங்கள்.. 31 வருடத்திற்கு பின்னும் நின்னு பேசும் படம்

ராஜ ராஜ சோழன்: மூவேந்தர்கள் நாட்டை ஆண்டு வந்தபோது பொற்கால ஆட்சியாக பார்க்கப்பட்டது ராஜராஜ சோழனின் ஆட்சிதான். இந்த ராஜராஜ சோழனாக கம்பீரத்துடன் சிவாஜி நடித்திருந்தது அந்த அரசனே நேரில் வந்தது போல் திரையில் இருந்தது. அப்படி ஒரு நடிப்பையும், உடல் அசைவையும் வெளிப்படுத்தி இருந்தார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன்: வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அவர்களை தைரியமாக எதிர்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்த கட்டபொம்மனாக இன்று வரை நம் மனதில் நிற்பது சிவாஜி தான். வரி கேட்டு வரும் வெள்ளையன் ஜாக்சன் துரையிடம், நீ எங்களோடு வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா என்று ஆரம்பிக்கும் வசனத்தை மூச்சு விடாமல் பேசி இன்றுவரை கட்டபொம்மன் இப்படி தான் பேசி இருப்பார் என நம் மனதில் நிலை நிறுத்தி இருக்கிறார்.

Also Read:750 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியை பார்த்த சிவாஜி.. 3-வது முறையாக போட்டிக்கு வரும் ரீ ரிலீஸ் படம்

கப்பலோட்டிய தமிழன்: செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையாக சிவாஜி நடித்த திரைப்படம் கப்பலோட்டிய தமிழன். இந்தப் படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் முதன் முதலில் வரி விலக்கு கொடுக்கப்பட்ட படமும் இதுதான். அந்த வருடத்திற்கான நிறைய விருதுகளையும் அள்ளியது.

ராஜபார்ட் ரங்கதுரை: மேடை கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி தான் இந்த படம் பேசியிருக்கும். ஆனால் இதன் ஒரு காட்சியில் சிவாஜி கொடி காத்த குமரனாக நடித்திருப்பார். உயிர் நீங்கும் வரை தன் கையில் இருக்கும் தேசிய கொடியை விடாத கொடிகாத்த குமரன் நிஜமாகவே அந்த சம்பவம் நடக்கும் பொழுது இப்படித்தான் இருந்திருப்பார், இப்படித்தான் பேசியிருப்பார் என நமக்கு சொன்ன காட்சி அது.

Also Read:சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்