90’s இல் கவர்ச்சிக்காகவே வாய்ப்புகளை குவித்த 5 ஹீரோயின்ஸ்.. விஜய் கவுண்டமணி விட்ட ஜொள்ளால் வளர்ந்த நடிகைகள்

5 heroines who have accumulated opportunities for glamour in 90’s: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை என்றவாறு கலவையாகவே படங்கள் வரத் தொடங்கி ஹிட் அடித்தன. ஐட்டம் டான்ஸ் என்று தனியாக வைக்காமல் படத்தில் நடித்த நடிகைகளே படத்திற்கு தேவை ஏற்பட்டபோது கவர்ச்சி உடன் நடிக்க தொடங்கினர் எனலாம்.

மந்த்ரா: தமிழ் சினிமாவில் குஷ்பூக்கு அடுத்தபடியாக “கும்” என்று இருந்த நடிகை மந்த்ரா ஆவார். இவர் அருண்குமார் உடன் பிரியம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இயல்பாகவே வசீகர தோற்றத்துடன் வலம் வந்த மந்திராவை, இயக்குனர்கள்  தேவையற்ற இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வைத்து அவரது கேரியரை காலி செய்தனர் என்று பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் மந்த்ரா.

ரம்பா: தொடை அழகி ரம்பா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர்.  சுந்தர் சி யின் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ரம்பா தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் கவர்ச்சியுடன் நடித்தார். ஒரு காலகட்டத்திற்கு பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் இலங்கை தொழிலதிபரை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான அவர்  தற்போதும் கவர்ச்சியுடன் புகைப்படங்களை எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவினை பெற்று வருகிறார்.

Also read: ஓவர் நைட்டில் ஏஞ்சலினா ஜோலியாக மாறிய 5 நடிகைகள்.. சிம்ரனுக்கு டஃப் கொடுத்த 2 ஹீரோயின்

சங்கவி: 14 வயதில் அஜித்துடன் அமராவதி படத்தில் அறிமுகமானார் நடிகை சங்கவி. விஜய்யுடன் நிறைய படங்களில் கமிட் ஆகி  கவர்ச்சியுடன் நடித்தார். படத்திற்கு தேவை இல்லை என்றாலும் இவர் நடிப்பதற்காகவே மழைக்காட்சி, நீச்சல் உடை, என கவர்ச்சியான அனைத்தையும் செட் பண்ணி விடுவார்களாம் இயக்குனர்கள். ஆரம்ப காலங்களில் விஜய் அதிகமாக  ஜொள்ளு விட்ட நடிகை சங்கவி ஆவார்.

ரவளி: “பட்டத்து ராணி” என்ற படத்தில் அறிமுகமான ரவளி கரிசக்காட்டு பூவே,  விஜயகாந்த் உடன் திருமூர்த்தி என பல படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் இவர் பிரபலமாக அறியப்படுகிறார். கவர்ச்சியுடன் நடித்து வந்த ரவளி ஒரு கட்டத்தில் இனி கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அதிரடியாகவும் அறிவித்து சினிமா துறையில் இருந்து விலகினார்.

ஜோதிமீனா: மறைந்த கிளாமர் குயின் ஜோதிலட்சுமியின் மகள்தான் இந்த ஜோதி மீனா. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கவுண்டமணி மணிவண்ணன் என பலரும் இவரின் பின்னால் ஜொள்ளு விட்டு அலைந்திருந்தனர். கவர்ச்சியாகவே நடித்த இவர் ஒரு காலகட்டத்திற்கு பின், ஏன் இந்த மாதிரியான வேடங்களில் நடித்தேன் என்று மிகவும் நொந்து கொண்டுள்ளாராம்.

Also read: அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்