கிராமத்து லுக்கில் நடித்து மார்க்கெட்டை எகிரி பிடித்த 5 நடிகைகள்.. அதிதிக்கு கைகொடுக்குமா விருமன்?

சினிமாவில் இருக்கும் நடிகைகள் கிளாமராகவும் மாடலாகவும் இருந்துதான் ஆகவேண்டும். ஆனால் சில நடிகைகள் தனது சினிமா கேரியரை கிராமத்து லுக்கில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி மார்க்கெட்டை பிடித்தனர். அந்தவகையில் அதிதி ஷங்கர் சமீபத்தில் வெளியான விருமன் படத்தின் மூலம் கிராமத்துப் பெண்ணாக கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அந்தப்படம் அவருக்கு கை கொடுக்குமா என்பது இனிதான் தெரியும்.

லட்சுமி மேனன்: மலைவாழ் கிராமத்து பெண்ணாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் 2012 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கேரள நடிகை லட்சுமி மேனன்.

இந்தப்படத்தில் இவர் வித்தியாசமாக கட்டியிருக்கும் சேலை, சைடு கொண்டை என அல்லியாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வெகு சீக்கிரமே பிரபலமானார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. லட்சுமி மேனன் இந்தப் படத்திற்கு முன்பே மலையாளத்தில் அறிமுகமானார்.

 அதிதி ஷங்கர்: பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், சமீபத்தில் வெளியான விருமன் படத்தின் மூலம் அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் அவர் ‘மதுர வீரன்’ என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

முதல் படத்தில் கிராமத்தில் லுக்கில் அதிதி நடித்து, தனது கேரியரை துவங்கியிருக்கிறார். இதனால் விருமன் படத்தின் மூலம் அதிதிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அமலா பால்: சிந்து சமவெளி என்ற படத்தில் கிராமத்தில் லுக்கில் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை அமலாபால், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் தாவணி பாவடையில் படம் முழுவதும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் சீக்கிரம் பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, சித்தார்த்துடன் காதல் சொதப்புவது எப்படி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை எளிதில் பெற்று டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், 2012ஆம் ஆண்டு அட்டகத்தி படத்தில் அமுதா கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த புகழ்பெற்றார்.

அதன்பிறகு வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் அதே கிராமத்து சாயலிலும், அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு அம்மாவாக எந்த தயக்கமும் இன்றி நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நயன்தாரா, தற்போது வரை 74 படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இவர் 2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்கு முன்பு மலையாளத்தில் சில படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். இருப்பினும் நயன்தாரா ஐயா படத்தில் எதார்த்தமாக முதல் படத்திலேயே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். தற்போது நயன்தாரா பெண்களை மையமாக கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்த நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் தங்களது சினிமா கேரியரை கிராமத்து கதாபாத்திரத்தில் ஆரம்பித்து, ரசிகர்களின் மனதில் எளிதில் பதிந்து விட்டனர். அதிலும் அந்தப் படங்களில் இவர்களது நடிப்பு இப்போது வரை தனித்துவமாக பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்