நீங்க சீரியல் நடிகை என ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன வாணி போஜன்

வெள்ளித்திரையில் வாய்ப்பு பெறுவதற்காக சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, முன்னேறும் நடிகைகள் பலர் உண்டு. அப்படி சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தும் அவர்கள் சீரியல் நடிகைகள் என்பதினாலேயே ஒதுக்கப்படுகின்றனராம்.

வாணி போஜன்: சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் குட்டி நயன்தாரா என புகழப்பட்ட பிரபல சீரியல் நடிகை வாணி போஜனுக்கு, அதன் பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

2020 ஆம் ஆண்டு வெளியான லாக்கப் படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான் போன்ற படங்களில் தொடர்ந்து வாணிபோஜன் நடித்தாலும், எந்த படமும் இதுவரை சூப்பர் ஹிட் கொடுக்கவில்லை.

இதனால் தயாரிப்பாளர்களும், ‘இவர் முகத்தை தான் தினமும் மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் வேண்டாம்’ என அடுத்தடுத்த படங்களில் ஒதுக்குகின்றனர். இப்படி சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த வாணி போஜன், வெள்ளித்திரையில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸ் ஆனார்.

Also Read: வெளிப்படையாக உண்மையை கூறிய வாணி போஜன்

பிரியா பவானி சங்கர்: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’  சீரியலின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர், அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் 2-வது கதாநாயகியாகவும், மான்ஸ்டர் படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தார். அதன் பிறகு சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருப்பார்.

மேலும் பிரியா பவானி சங்கர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 என்ற படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். என்னதான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும், சீரியல் நடிகை என்பதினாலேயே எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைப்பதில்லை.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

அனிதா சம்பத்: சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்டார். அதன்பிறகு விதவிதமான போட்டோக்களை நடத்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வர ஆசைப்பட்ட அனிதா சம்பத்துக்கு, திரைப்படங்களிலும் செய்திவாசிப்பாளராகவே இருப்பது போன்ற சிறுசிறு கதாபாத்திரங்களே குவிகிறது.

காலா, சர்க்கார், காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், இரும்பு மனிதன், டேனி முதலிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இருப்பினும் இவருக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட பட வாய்ப்பு தற்போது வரை கிடைக்கவில்லை.

anitha sampath
anitha sampath

Also Read: குளியல் அறை புகைப்படத்தை வெளியிட்ட அனிதா சம்பத்

VJ ரம்யா: 2004 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்ட VJ ரம்யா, அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளான கலக்கப்போவது யாரு. உங்களில் யார் பிரபுதேவா. நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணித் தொகுப்பாளராக வலம் வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடி ரம்யா, 2007-ம் ஆண்டு வெளியான மொழி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழியாக தோன்றினார்.

பிறகு  மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர், சங்கத்தலைவர் போன்ற படங்களில் துணை நடிகையாக மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு ரம்யாவிற்கு கிடைத்தது. இவர் என்னதான் முயற்சித்தாலும் ஹீரோயின் சான்ஸ் கிடைக்காமல் சப்போர்ட்டிவ் கேரக்டர்கள் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

vj-ramya-1
vj-ramya-1

திவ்யதர்ஷினி: முன்னணி பெண் தொகுப்பாளராக வலம் வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, தன்னுடைய நகைச்சுவையான துள்ளலான பேச்சினால் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், காபி வித் டிடி, சூப்பர் சிங்கர் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இவர் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் பள்ளி மாணவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பா பாண்டி, கூர்கா, காப்பி வித் காதல் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பார். இருப்பினும் டாப் கதாநாயகியாக மாறவேண்டும் என்ற ஆசையில் சோசியல் மீடியாவில் இவர், கண் கூசும் புகைப்படங்களை பதிவிட்டு சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.

Also Read: ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

dd-dhivya-dharshini
dd-dhivya-dharshini

இவ்வாறு இந்த 5 சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமலும், கிடைத்த வாய்ப்புகளும் சரியாக அமையாததால் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கின்றனர். இருப்பினும் தங்களுக்கென்று ஒரு இடத்தை சினிமாவில் வகுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News