இன்று வரை குழந்தை முக ஹீரோக்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அதற்கு ஆசைப்படும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் முகம் பால் வடியும் பச்சை குழந்தை போல் இருப்பதால் அவர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாகவே எடுபடவில்லை. இவர்கள் சண்டைக்காட்சியில் நடித்தாலும் மக்கள் ரசிப்பதில்லை. ஆக்ஷன் ஹீரோக்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலையில் தங்களுடைய குழந்தை முகத்தால் இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது. அவ்வாறு உள்ள 5 நடிகர்களை பார்க்கலாம்.

ஹரிஷ் கல்யாண் : தமிழ் சினிமாவில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். காதல் படங்களில் இவருடைய நடிப்பு பலராலும் கவலைப் பட்டாலும் ஆக்சன் படங்கள் இவருக்கு சுத்தமாக செட்டாகவில்லை. தற்போதுவரை ஒருவகையான இடத்திற்காக ஹரிஷ் கல்யாண் போராடி வருகிறார்.

கௌதம் கார்த்திக் : தன்னுடைய முதல் படமான கடல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இவருடைய முகமும் பார்ப்பதற்கு குழந்தை முகம் போல் உள்ளதால் இவருடைய ஆக்ஷன் படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

அதர்வா : ஆரம்பத்தில் அதர்வாவின் படங்கள் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்த அவருடைய படங்கள் தோல்வியையே சந்தித்து வந்தது. மேலும் அவர் நடிப்பில் வெளியான ஆக்சன் படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அவர் தந்தை பெற்ற இடத்தை கூட அதர்வாவால் பெற முடியவில்லை.

விமல் : களவாணி படம் விமலுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால் காமெடி, காதல் படங்கள் கைகொடுத்த அளவிற்கு விமலுக்கு ஆக்சன் படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு இவருடைய குழந்தை போன்ற முகமும் ஒரு காரணம். இதனால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் உள்ளார்.

ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளராக தன் திரைப் பயணத்தை தொடங்கி தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டார்லிங் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள் எது சரியாக போகவில்லை. ஆனால் தற்போது வரை படங்களில் நடித்த தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

Next Story

- Advertisement -