ஹீரோவாக நடித்தும் வில்லனாக மட்டுமே பெயர்பெற்ற 5 நடிகர்கள்.. குரலை வைத்தே வாய்ப்பு வாங்கிய இளம் நடிகர்

தமிழ் சினிமாவில் எப்போதும் நாயகர்களுக்கு பஞ்சம் இருந்ததில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் சிலர் ஒரு சில படங்களில் மிரட்டினாலும் அடுத்தடுத்து சிறப்பான படங்கள் அமையாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்றோர் பின்நாளில் நாயகர்களாக மாறினர். நம்பியார், ரகுவரன், பொன்னம்பலம், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என சிறந்த வில்லன்களை கொண்ட தமிழில் உண்மையாக தற்போது வில்லன் நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சிலர் வில்லனாக மிரட்டினாலும் இன்னும் பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய வில்லன்களாக மாறவில்லை. வளர்ந்து வரும் நல்ல வில்லனாக நடித்தால் சிறந்த எதிர்காலம் உள்ள நடிகர்களை பற்றி காணலாம்.

1) ஆர்.கே.சுரேஷ் – இயக்குனர் பாலாவின் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய முத்திரையை பதித்தார். “தாரை தப்பட்டை” படத்தில் முதல் பாதியில் பாவமான மனிதனாகவும், நாயகியான வரலட்சுமியை திருமணம் செய்த பின் மிருகமாக மாறி பார்ப்போரை வியக்க வைத்தார்.

அதன் பின் விஷாலுடன் “மருது” படத்திலும் “ரோலக்ஸ் பாண்டி” என்ற கதாபாத்திரத்தில் விஷாலுக்கு இணையாக இறங்கி அடித்திருந்தார். நல்ல உடற்கட்டு, தமிழ்நாட்டு சாதாரண மனிதன் போன்ற தோற்றம் என ஒரு வில்லனுக்கான தனித்துவம் இவரிடத்திலுள்ளது. தயாரிப்பாளராக, விநியோகிஸ்தராக இருந்து தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கி இருக்கும் சுரேஷ், வில்லன் ரோல்களில் கவனம் செலுத்தினால் பெரிய ரவுண்ட் வருவார்.

2) அர்ஜுன் தாஸ் – சில படங்களில் முன்னர் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஒரு வில்லன் நடிகருக்கான நல்ல உயரம், திடகாத்திரமான உடல் என எதுவும் இல்லையென்றாலும் ரகுவரனை போல தன்னுடைய அழுத்தமான குரலாலும், சிறந்த நடிப்பாலும் பாராட்டுகளை வாரி குவித்தார்.

பின்னர் மீண்டும் லோகேஷுடன் மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியுடன் இணைந்து மிரட்டினார். தனித்துவமான குரலும், மாறுபட்ட நடிப்பும் கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோள்.

3) ஹரிஷ் உத்தமன் – நல்ல உயரம், உடற்கட்டு, தோற்றம் என ஒரு கச்சித வில்லன் நடிகருக்கான அனைத்து அம்சங்களும் கொண்டிருப்பவர் நடிகர் ஹரிஷ் உத்தமன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நிறைய மொழிகளில் நடித்து வரும் இவரை சிறந்த வில்லனாக இன்னமும் எந்த படத்திலும் உபயோகப்படுத்தவில்லை. விஜய் சேதுபதியின் ரெக்க, தனுஷின் தொடரி போன்ற படங்களில் வில்லனாக தோன்றியிருந்தாலும் ஒரு முழு நீள மிரட்டலான வில்லனாக அவர் இன்னும் நடித்திரவில்லை. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்தி கொண்டால் ஒரு சிறப்பான வில்லன் நடிகர் கிடைக்கக்கூடும்.

மேலும் குறிப்பிடும் வகையில் வில்லனாக தோன்றி நடித்துள்ளவர்கள் நடிகர்கள் வம்சி கிருஷ்ணாவும், நவீன் சந்திராவும். தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நவீன் சந்திராவை தமிழ் திரையுலகம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை. பட்டாஸ் படத்தில் நல்ல வில்லனாக நடித்திருந்தாலும் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தவில்லை. அதே போல தான் இவன் வேற மாதிரி, மான் கராத்தே படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வம்சி கிருஷ்ணாவும் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்திட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நவீன் சந்திரா– தனுஷிற்கு வில்லனாக பட்டாசு படத்தில் மிரட்டிய இவர் அதன்பின் தமிழ் படங்களில் தலை காட்டவில்லை என்றாலும். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “எவரு” படத்தில் மிரட்டி அனைவரின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வம்சி கிருஷ்ணா -இவன் வேறு மாதிரி, தனி ஒருவன் படத்தில்  தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய வம்சி கிருஷ்ணா பல படங்களில் வில்லனாக தற்போது வளர்ந்து வருகிறார் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மான்கராத்தே படத்தில் இவரது நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்