சமீபத்தில் நெட்பிலிக்ஸ்சை பதற வைத்த 5 படங்கள்.. இந்தியன் 2க்கு முன் வச்சு செஞ்ச நான்கு ஹீரோக்கள்

இப்பொழுது ஓடிடி தளங்கள் எல்லோரும் உஷாராகி விட்டனர். அதிக விலை கொடுத்து வாங்கும் படங்கள் எல்லாம் ஓடிடியில் போனியாவதில்லை. அப்படி சமீபத்தில் ஐந்து படங்களுக்கு அதிக விலை கொடுத்து நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் ஏமாந்துள்ளது.

இந்தியன் 2 : ஆகஸ்ட் 9 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது இந்தியன் 2. இந்த படத்தை 200 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது நெட்பிலிக்ஸ். ஆனால் படம் அதற்கு கொஞ்சம் கூட வொர்த்தில்லை. ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்தியன் மூன்றாம் பாகத்தையும் சேர்த்து தான் இந்த விலையில் வாங்கியுள்ளது.

கல்கி: கமல், பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கல்கி. இந்த படத்தை நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் ஓடிடி தளங்கள் வாங்கியது.சுமார் 175 கோடிகள் கொடுத்து இந்த படத்தை வாங்கியது. ஆனால் படம் தியேட்டர்களிலேயே வசூல் டல்லடித்தது.

மெரி கிறிஸ்மஸ்: மார்ச் 8 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்தது. தியேட்டரில் வெறும் 23 கோடிகள் மட்டுமே வசூலித்தது.ஆனால் நெட்பிலிக்ஸ் விஜய் சேதுபதி மற்றும் கேத்தரினா கைஃப் இருவரையும் நம்பி 35 கோடிகள் வரை கொடுத்து வாங்கியது.

சந்திரமுகி 2: பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்டத்தை கொடுத்தது. முதல் பாகத்தில் நடித்த ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்தார். அதனால் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணவத் நடித்திருந்தார்கள். எட்டு கோடிகள் கொடுத்து இந்த படத்தை வாங்கியது நெட்பிலிக்ஸ்.

ஜப்பான்: 2023 தீபாவளி அன்று வெளிவந்த ஜப்பான் படம் உலக அளவில் பதினாறு கோடியில் வசூலித்தது. இதனை நெட்பிலிக்ஸ் 10 கோடிகள் கொடுத்து வாங்கியது ஆனால் படம் அதற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லை. தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது இந்த படம்.

Next Story

- Advertisement -