திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

டிசம்பர் மழை புயலை குறிவைக்கும் 5 படங்கள்.. தனுசுக்கும் வெற்றிமாறனுக்கும் நேரம் சரியில்லை

சென்னையை பொருத்தவரை நவம்பர், டிசம்பரில் தான் கனமழை காலங்கள். எப்பொழுதும் இந்த டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே புயலும் மலையும் சென்னையை புரட்டி எடுத்து விடும். மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாமல் 5 படங்கள் டிசம்பரில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது

குபேரா: தனுஷ் மற்றும் நாகார்ஜூன் போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் யூனிட்டில் உள்ள அனைவரும் இவர்களது நடிப்பை பார்த்து பிரமித்து போய் உள்ளனர். இது நேரடி தெலுங்கு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழிலும் வெளிவருகிறது.

விடுதலை பார்ட் 2: ஒரு வழியாக வெற்றிமாறன் இந்த படத்தை முடித்து விட்டார் ஆனால் ஒரு வருட காலம் தாமதம் ஆகிவிட்டது. விடுதலை முதல் பாகம் 2023 மார்ச் மாதம் வெளிவந்தது அப்பொழுதே மூன்று மாதம் கழித்து விடுதலை இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இந்த டிசம்பரில் தான் அதற்கு நேரம் வந்துள்ளது.

பாக்ஸர்: யானை படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. மிஷன் சாப்டர் ஒன் படம் மட்டுமே அதன் பின் வெளிவந்தது. இப்பொழுது இவர் நடிப்பில் பாக்ஸர் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

வணங்காமுடி: இந்த படம் சூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்த நேரத்திலேயே இந்த படமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரை பிரச்சினையில் இருக்கிறது. இந்த படத்தை இப்பொழுது டிசம்பர் மாதம் வெளியிட திட்டம் போட்டிருக்கிறார்கள்.

புஷ்பா 2: அல்லு அர்ஜுன் நடிப்பில் பட்டையை கிளப்பிய படம் புஷ்பா. இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதுவும் டிசம்பர் மாத கிறிஸ்மஸ் வெளியீடாக இருக்கிறது.

- Advertisement -

Trending News