மன்சூர் அலிகான் விஜய்க்கு வில்லனாக நடித்த 5 படங்கள்.. லோகேஷ் தேடி தேடி வாய்ப்பு கொடுத்தது இதுக்கு தானா

விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாகுவதை தொடர்ந்து, இந்தப் படத்திற்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய், லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்திற்குப் பிறகு 2ம் முறையாக இணைகிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய் மும்பையை சேர்ந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்தப் படத்திற்கு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் நிவின் பாலி, மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோர்  இவருக்கு இதுவரை 6 வில்லன்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அதிலும் லோகேஷ் இந்தப் படத்திற்கு மன்சூர் அலிகானை எதற்கு தேர்வு செய்தால் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது ஏற்கனவே 90களில் மன்சூர் அலிகான் கூட்டணியில் ஐந்து படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றதை லோகேஷ் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறார்.

நாளைய தீர்ப்பு: 1992 ஆம் ஆண்டு விஜய் ஹீரோவாக நடித்து வெளியான முதல் படமான இந்த படத்தில் மன்சூர் அலிகான் போலீஸ் கெட்டப்பில் விஜய்க்கு வில்லனாக மிரட்டி இருப்பார். இந்த படத்தின் படத்திற்குப் பிறகு இவர்களது கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்து வெற்றி கண்டது.

Also Read: 60 வயசுல இப்படி ஒரு எனர்ஜியா? லோகேஷ் போட்ட ஒரே கண்டிஷனால் வெறிபிடித்து அழையும் மன்சூர் அலிகான்

தேவா: 1995 ஆம் ஆண்டு விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் தேவா கதாபாத்திரத்தில் தம்பியாகவும், தேவாவின் அண்ணன் ராஜதுரை கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் அண்ணனாகவும் நடித்திருப்பார். இதில் சொந்த அண்ணன் மன்சூர் அலிகானின் மோசமான நடவடிக்கையால் அவருக்கு எதிராக போராடும் தம்பியாக விஜய் இதில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர்களது அல்டிமேட் காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 100 நாட்களுக்கு மேல் திரையிடங்குகளில் ஓடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மாண்புமிகு மாணவன்: 1996 ஆம் ஆண்டு மீண்டும் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் மணிவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதிலும் விஜய்க்கு வில்லனாக அரசியல்வாதியான கெட்டப்பில் மன்சூர் அலிகான் மிரட்டி இருப்பார்.

Also Read: திமிராக மல்லு கட்டிய மன்சூர் அலிகான்.. பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கட்டும் என விரட்டியடித்த பிக் பாஸ்

வசந்த வாசல்: விஜய் சுவாதி ஜோடி சேர்ந்த இந்த படம் அதிரடி காதல் திரைப்படம் ஆக 1996 ஆம் ஆண்டு வெளியானது இதில் காதலர்களாக இருக்கும் விஜய் சுவாதிக்கு குடைத்தல் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் கணேசன் கதாபாத்திரத்தில் மண்ணு மன்சூர் அலிகான் நடித்திருப்பார் ட இதில் சுவாதியின் முறை மாமனாக மன்சூர் அலிகான் கொடுக்கும் குடைச்சலை சமாளித்து எப்படி காதலர்கள் கடைசியில் கரம் பிடிக்கின்றனர் என்பதுதான் படத்தில் சுவாரசியமாக இருக்கும்.

மின்சாரக் கண்ணா: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு விஜயுடன் குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் மன்சூர் அலிகான் வேதாச்சலம் கதாபாத்திரத்தில் வில்லனாக இணைந்து நடித்திருப்பார். இதில் இவர்களது எதிரும் புதிரும் ஆன காம்போ பக்கவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

Also Read: மண்டைய போடுறதுக்குள்ள அவர் படத்துல நடிக்கணும்.. வெளிப்படையாக கூறிய மன்சூர் அலிகான்

இவ்வாறு ஏற்கனவே விஜயின் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமான மன்சூர் அலிகானை மீண்டும் தளபதிக்கு வில்லனாக, தளபதி 67 படத்தில் லோகேஷ் தேர்வு செய்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுதியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்