சூர்யாவை நஷ்டத்தில் தள்ளிய 5 படங்கள்.. ரீ என்ட்ரி மூலம் மீட்டெடுத்த குடும்ப குத்து விளக்கு

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் நடிகர் சூர்யா. நடிப்பின் மூலம் சினிமா துறையில் பட்டையை கிளப்பி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். நடிப்பினை தொடர்ந்து படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு 2 டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில் தனது மனைவியை வைத்து தயாரித்த படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இவ்வாறு தோல்வியை சந்தித்த இந்த 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

பொன்மகள் வந்தாள்: 2020 ஆம் ஆண்டு ஜே.ஜே பிரெட்ரிக் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இதில் சைக்கோ கொலையாளியை தனது திறமையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் திறமையான வழக்கறிஞராக நடித்திருப்பார். அதிலும் ஜோதிகாவுடன் தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களாக இருக்கக்கூடிய 5 இயக்குனர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பொன்மகள் வந்தால் திரைப்படம் நேரடியாக பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. 

Also Read: தோல்வி பயத்தில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட 5 தமிழ் படங்கள்.. இரண்டு முறை செத்து பிழைத்த ஜோதிகா

ஜாக்பாட்: இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதில் அட்சய பாத்திரம் என்ற பொருளை மையமாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது. இந்த அட்சய பாத்திரத்தில் நாம் எதை கொடுக்கிறோமோ அந்த பொருள் பல மடங்காக பெருகி எடுக்க எடுக்க வந்து கொண்டே இருப்பது போல் சுவாரசியமாக கதையினை அமைத்துள்ளனர். இருந்தும் இப்படம் வெற்றி படமாக அமையவில்லை. 

மகளிர் மட்டும்: இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மூன்று பெண்களுக்குள் நடக்கும் அட்ராசிட்டிகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Also Read: சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

36 வயதினிலே: 2015 இல் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் ரகுமானுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வெளிவந்த படம். குடும்பத்தின் பொறுப்புகளின் மூலம் தனது கனவுகளையும் அடையாளத்தையும் தொலைக்கும் ஒரு பெண் அதனை எவ்வாறு தனது 36-வது வயதினில் மீட்டுக் கொண்டு வருகிறார் என்பதை மையமாக கொண்டு இப்படமானது அமைந்துள்ளது.

உடன்பிறப்பு: 2021 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா-வின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் குடும்ப பாசத்தினை மையமாகக் கொண்டு அமைந்த திரைப்படம் ஆகும். அதிலும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு உறவுகளை வளர்ப்பது ஏன் முக்கியம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவது போல் அமைந்து உள்ளது. இப்படத்தில் குடும்ப சென்டிமென்ட்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

Also Read: சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்