ஷங்கர் தயாரிப்பை நிறுத்த காரணமான 5 படங்கள்.. நினைத்துக்கூட பார்க்காத பலமான அடி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு வெற்றி இயக்குனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவர் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய அளவில் கல்லாவும் கட்டி இருக்கிறார். ஆனால் கடைசியாக அவர் தயாரித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டார்.

அறை என் 305-இல் கடவுள் : ஷங்கர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தை தயாரித்து நல்ல லாபம் பார்த்த நிலையில் அதே இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான அறை எண் 305ல் கடவுள் படத்தில் தயாரித்தார். இப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read :கமல் இல்லாமல் தொடங்கும் படப்பிடிப்பு.. ஏழரை முடிஞ்சி பெருமூச்சு விட்ட இயக்குனர்!

ஈரம் : அறிவழகன் இயக்கத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈரம். திரில்லர் படமாக வெளியான இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் லாபத்தைத் தரவில்லை. இதனால் இப்படத்தை தயாரித்தால் ஷங்கருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ரெட்டை சுழி : கே பாலச்சந்தர், பாரதிராஜா, ஆதி அர்ஜுன், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ரெட்டைசுழி. ஷங்கர் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்த ரெட்டைசுழி படம் தோல்வியை தழுவியது. மேலும் இயக்குனர் இமயம் பாலச்சந்தருக்கு இப்படம் கடைசி படமாக அமைந்தது.

Also Read :பிரபல நடிகரின் தீவிர ரசிகரான சங்கர் மகள்.. அதிதி சங்கரை கொண்டாடும் ரசிகர்கள்

ஆனந்தபுரத்து வீடு : நாகா இயக்கத்தில் நந்தா, சாயா சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ஆனந்தபுரத்து வீடு. மர்மம் நிறைந்த வீட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை ஷங்கர் தயாரித்திருந்தார். நேர்மையான விமர்சனங்களை பெற்ற இப்படம் எதிர்பார்த்த லாபத்தை பெற்றுத் தரவில்லை.

கப்பல் : ஷங்கர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனரான கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கப்பல். இப்படத்தில் வைபவ், கருணாகரன், சோனம் பாஜ்வா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்றுத் தரவில்லை.

Also Read :ஷங்கரின் வாரிசு என்பதால் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறதா?. அருண் விஜய்யின் பதில்

Next Story

- Advertisement -