சூர்யாவை கை பிடித்து தூக்கி விட்ட 5 படங்கள்.. அன்புச்செல்வன் ஐபிஎஸ் மறக்க முடியுமா?

25 வருடங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா, தன்னுடைய நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நேருக்கு நேர்’ என்கின்ற முதல் படத்திலேயே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன்பிறகு இவர் வளரும் நடிகராக ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும், இவர் இந்த அளவிற்கு வளர்வதற்கு 5 படங்கள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

நந்தா: 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயிரம் அர்த்தங்களை வெளிக்காட்டும் சூர்யாவில் அமைதியான பார்வை மற்ற ஹீரோக்களை விட இவரை வேறுபடுத்திக் காட்டியது. இந்தப்படத்தில் காதல், கோபம், பாசம் அத்தனையையும் அடுக்கிக்கொண்டே வெளிக்காட்டாத சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரண்ட்ஸ்: தன்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த சூர்யா, அந்த படத்திற்கு பிறகு பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இவர்களது காம்போ பக்காவாக ஒர்க்கவுட் ஆகியிருந்தது. இந்தப் படத்தில் சூர்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அவரை அடுத்தடுத்த வெற்றி படங்களுக்கு இட்டுச்சென்றது. இந்த படத்தில் சந்துரு கதாபாத்திரம் சூர்யாவிற்கு கச்சிதமாக பொருந்தி அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

மௌனம் பேசியதே: அமீர் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சூர்யா ஒருதலை காதலாக திரிஷாவை காதலிக்க, அதன்பிறகு கல்லூரியில் இருந்து தன்னை காதலித்த லைலாவை கரம் பிடித்த சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு இவருடைய ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்க செய்தது.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரொமான்டிக் காதல் திரைப்படமாக கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் இணைந்து நடித்திருப்பார். இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவுடன் நடனத்தில் அசத்தியிருப்பார்.

உன்னை நினைத்து: 2002 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்திருக்கும் இந்த படத்தில் ஏமாற்றிய காதலியை மன்னித்து தண்ணீர் காதலித்த பெண்ணை கரம்பிடித்த சூர்யாவின் எதார்த்தமான நடிப்பு, அவரை அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடிக்க வைப்பதற்கு காரணமாக இருந்தது.

இவ்வாறு சூர்யா நடிப்பில் வெளியான இந்த ஐந்து படங்களும் அவருடைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்து படங்களாக சொல்லப்படுகிறது. இவருக்கு இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வெற்றிதான் அவர் தற்போது முன்னணி நடிகராக மாறுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

Next Story

- Advertisement -