வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த வாரம் ஓடிடியில் தரமாக வெளியாகும் 5 படங்கள்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் வேட்டையன்

This week OTT Release Movies: நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் வெளியானது. இதை அடுத்து இந்த வாரமும் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களும் ஓடிடியில் வர இருக்கிறது. தியேட்டரில் அமரன், ப்ளடி பக்கர், பிரதர் ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ஓடிடி நல்ல ஐந்து படங்களை இறக்க உள்ளது. அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய வசூலை வாரி குவித்த படம் வேட்டையன்.

இந்த படம் தியேட்டரில் நல்ல வசூல் செய்த நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற நவம்பர் 8 ஆம் தேதி தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் செப்டம்பர் மாதம் வெளியான படம் தான் கோழி பண்ணை செல்லதுரை.

நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

இதில் ஏகன், சத்யா, யோகி பாபு போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் நவம்பர் ஐந்தாம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ARM.

டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது. இப்போது நவம்பர் எட்டாம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ARM படம் ஸ்ட்ரீம்ங் ஆகிறது. செப்டம்பர் மாதம் தெலுங்கில் சந்தீப் ரெட்டி பண்டலா இயக்கத்தில் வெளியான படம் ஜனக ஐதே கனகா.

இந்த படம் நவம்பர் 8 ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமந்தா நடிப்பில் வெளியான சிட்டால் ஹனிபி வெப் சீரிஸ் ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம்ங் செய்யப்படுகிறது. இந்த சீரிஸை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News