சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடி காட்சிகளாக வெளிவந்த 5 படங்கள்.. 500 கோடியை ஆட்டைய போட்ட விநாயக்

Action and Suspense 5 Movies: சில படங்களை பார்க்கும் பொழுது மட்டும் தான் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் கண்ணிமைக்காமல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் பார்க்கும் படியான காட்சிகள் அமைந்திருக்கும். அந்த அளவிற்கு சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடி காட்சிகளை திரில்லராக வைத்து பார்க்கிற 3 மணி நேரம், டைம் போகிறதே தெரியாமல் அப்பிடத்திலேயே மூழ்கும்படி பார்த்து ரசிப்போம். அப்படிப்பட்ட படங்களை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்

யுத்தம் செய்: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் யுத்தம் செய் திரைப்படம் வெளிவந்தது. எதார்த்த நாயகனாக மென்மையான கேரக்டரில் நடித்து வந்த சேரன் இப்படத்தில் வியக்க வைக்கும் ஆக்டிங்க் வரை சென்று நடிப்பை கொடுத்திருக்கிறார். பெண்களை கடத்திட்டு வந்து அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அறுபது வயசு கிழவன்கள் செய்யும் அக்கிரமங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குடும்பம் அந்த கும்பலை பழி வாங்கும் விதமாக காட்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதைகளுடன் அமைந்திருக்கும்.

16 கொலைகள் செய்த வேதா, 18 என்கவுன்ட்டர்கள் பண்ணிய விக்ரம்

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது நந்து சிறுவயதிலேயே அவருடைய சித்தியை கொன்றதுக்காக சிறை செல்கிறார். இந்த கசப்பான அனுபவங்களால் அவருக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் காதலித்து கல்யாணம் பண்ணிய மனைவியை நந்துவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்பொழுது நந்து, விஜய்யின் மனைவியை சித்தியின் பிரதிபலிப்பாக பார்க்கிறார். அதனால் எப்படியாவது அவரிடம் இருந்து விஜயை காப்பாற்ற வேண்டும் என்று உறுதியுடன் அவர் போகும் இல்லை தான் ஆளவந்தான்.

வேட்டையாடு விளையாடு: கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது பெண்ணிடம் தவறாக நடந்து கொடூரமான முறையில் கொன்று புதைத்து விட்டு செல்லும் இரண்டு சைக்கோ கேரக்டர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியாக டிசிபி ராகவன் கேரக்டரில் கமல் ஆக்சன் காட்சிகளுடன் மிரட்டி இருக்கிறார்.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு அஜித், அர்ஜுன், த்ரிஷா நடிப்பில் மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தைப் பொறுத்தவரை ஹீரோ என்று யாருமே இல்லை. நடித்த அனைத்து நடிகர்களுமே கெட்டவர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு சூது கொள்ளை கைவந்த கலையாக இருக்கும். மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, மும்பையில் வைத்துக் கைமாற்றுகிறார் மாஃபியா புள்ளி ஜெயப்ரகாஷ். இதை எப்படியாவது ஆட்டைய போட வேண்டும் என்று சஸ்பென்சில் இருக்கும் போலீஸ் அஜித், மாபியா கும்பலில் சேர்கிறார். கடைசியில் அவர்களுக்கே நாமம் போடும் அளவிற்கு அஜித் அனைவர் கண்ணிலும் மண்ணைத் தூவி அர்ஜுன் உதவியுடன் பணத்தை கொள்ளையடிப்பதற்கு நடத்தும் ரேஸ் தான் மங்காத்தா.

விக்ரம் வேதா: புஷ்கர்–காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் வெளிவந்தது. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமுக்கும் (மாதவன்) தாதாவான வேதாவுக்கும் (விஜய் சேதுபதி) இடையில் நடக்கும் விக்கிரமாதித்தன் – வேதாளம், தான் ‘விக்ரம் வேதா’. 16 கொலைகள் செய்த வேதாவை சுட்டுக் கொல்ல வலைவீசித் தேடுபவர் 18 என்கவுன்ட்டர்கள் செய்த விக்ரம். அந்த வகையில் இப்படம் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகளுடன் சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடி படமாக அனைவருக்கும் ஃபேவரிட் படமாக அமைந்துவிட்டது.

Next Story

- Advertisement -