அமலா பால் கேரியரை சோலி முடிந்த 5 படங்கள்.. குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்த சிந்து சமவெளி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார். என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். மேலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார். அதன் பின் இவர் நடித்த 5 படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

சிந்து சமவெளி: 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான இப்படம் முகம் சுளிக்க கூடிய படமாக அமைந்தது. இதில் அமலாபால், ஹரிஷ் கல்யாண், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிந்து சமவெளி படம் அமலாபால் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். குடும்பத்தில் கணவருக்கு துரோகம் செய்து, முறை தவறி நடக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இவருக்கு இது சினிமா துறையில் பெரும் மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்தது.

ஆடை: இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ஒரு சர்ச்சைக்குரிய படங்களில் ஒன்றாகும் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்களின் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ள படமாக அமைந்துள்ளது. இதில் ஆடை இல்லாமல் நடித்து இருப்பது பல்வேறு திரை விமர்சனங்களை பெற்று அவரின் கேரியரை கேள்விக்குறியானது.

Also Read: கதைக்காக ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்த 5 நடிகைகள்.. அத்தோட பட வாய்ப்பை இழந்த அமலா பால்

வேட்டை: 2012ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கி வெளிவந்த இப்படம் ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும். இதில் மாதவன், ஆர்யா, சமீராரெட்டி, அமலாபால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் ஆர்யாவுடன் சில நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது மேலுள்ள நல்ல அபிப்ராயத்தை இழந்தார்.

திருட்டுப்பயலே 2: 2017ஆம் ஆண்டு இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவான இரண்டாம் பாகம் ஆகும். இதில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களின் மூலம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவரின் வலையில் சிக்கி பிறகு எவ்வாறு தப்பிபார் என்பதை கதைக்களமாகக் கொண்டுள்ளது. நவீன காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் இன்றைய தலைமுறைகள் சந்திக்கும் பிரச்சனை பற்றி புரியும் படியும் திரைக்கதை அமைந்துள்ளது.

Also Read: ஈரம் சொட்ட முழு நீச்சலுடையில் போஸ் கொடுத்த அமலா பால்.. இப்பவே கண்ண கட்டுதே

முப்பொழுதும் உன் கற்பனைகள்: 2012ஆம் ஆண்டு இயக்குனர் எல்ரெட் குமார் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இதில் அதர்வா, அமலா பால், நாசர், சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் அமலாபாலின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமையவில்லை.

இவ்வாறு நடிகை அமலா பால் நடிப்பில் வெளிவந்த இந்த 5 படங்களும் சினிமா கேரியரையே குளோஸ் செய்த படங்களாகும். அதிலும் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் தவறான உறவில் இருப்பது போல் நடித்து குடும்பப் பெண்களை முகம் சுளிக்க வைத்தார்.

Also Read: முன்பு விதைத்த மோசமான விதை.. ரீ என்ட்ரியால் தியேட்டரில் இருந்து துரத்தப்பட்ட அமலா பால்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்