பாக்யராஜ் பதற பதற அடித்த ஊர்வசி.. குழந்தைத்தனமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு என்னும் திரைப்படத்தின் மூலம்  தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஊர்வசி. அதிலும் தனது நக்கல் கலந்த பேச்சின் மூலம் நகைச்சுவை உணர்வை கொடுக்க கூடியவர் ஆவார். அதிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படியாக ஊர்வசி தனது குழந்தை தனமான நடிப்பை வெளிப்படுத்திய ஐந்து படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

முந்தானை முடிச்சு: பாக்யராஜ் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்கியராஜ் உடன் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் எக்கச்சக்க ரசிகர்களை தன் வசப்படுத்தி இருந்தார். மேலும் இப்படத்தில் ஒவ்வொரு நிமிஷமும் பாக்கியராஜை  பதறடிக்கும், குறும்புத்தனம் கொண்ட வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார்.

Also Read: பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

மகளிர் மட்டும்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகளிர் மட்டும். இதில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் வரும் மூன்று பெண்கள் தங்களை தொடர்ந்து துன்புறுத்தும் அலுவலக முதலாளியை கொலை செய்ய முடிவெடுப்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படத்தில் ஜானகி என்னும் கதாபாத்திரத்தில் ஊர்வசி தனது அல்டிமேட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இரட்டை ரோஜா: கேயார் இயக்கத்தில் கே சி சேகர்பாபு தயாரிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரட்டை ரோஜா. இதில் ராம்கி உடன்  ஊர்வசி, குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் ஊர்வசி பணத்தின் மீது உள்ள மோகத்தால் தனது கணவரை தியாகம் செய்யும் அளவிற்கு வருகிறார். அதன்பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் உமா என்னும் கேரக்டரில் தனது வெகுளித்தனமான நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.

Also Read: நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்த 5 நடிகைகள்.. திரிபுரசுந்தரி ஆக ஊர்வசி அடித்த லூட்டி

மாயா பஜார்: இயக்குனர் கேயார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை கலந்த திகில் திரைப்படம் ஆகும். இதில் ராம்கி உடன் ஊர்வசி, விசு, விவேக், கிட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஊர்வசி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதிலும் சுஜி என்னும்  கேரக்டரில் ஊர்வசி குழந்தை தனமாக நடித்து அசத்தி இருப்பார்.

வனஜா கிரிஜா: மீனா பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வனஜா கிரிஜா. இதில் நெப்போலியன் உடன் ராம்கி, விசு, மோகினி, ஊர்வசி, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் செல்லம்மா என்னும் கேரக்டரில் ஊர்வசி தனது வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு.. பாக்கியராஜ்க்கு பதிலா யார் நடிக்க போறாங்க.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்