சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கேப்பே இல்லாமல் அடுத்தடுத்து ரெடியாகும் 5 படங்கள்.. ராஜமவுலி அளவுக்கு தெளிவா ஸ்கெட்ச் போடும் லோகேஷ்

Director Lokesh: இப்போது இருக்கும் இயக்குனர்களில் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக இருப்பவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு லோகேஷ் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு கேப்பே இல்லாமல் இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து படங்கள் ரெடியாக இருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி கூட இப்படித்தான் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு படங்களை தொடங்குவார். அவரையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு லோகேஷ் இப்போது அடுத்தடுத்த கதைகளை தயார் நிலையில் வைத்துள்ளாராம். அதில் லியோ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் படத்திற்கான வேலையையும் அவர் தொடங்கியுள்ளார்.

Also read: வாய தொறந்தா பாலாபிஷேகம், தோரணம் கட்ட ஆள் இருக்காது.. கமல், எம்ஜிஆர் வளர்த்ததை சீரழிக்கும் விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 171 படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த சூழலில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் இப்போதைக்கு தலைவர் படமும் அடுத்ததாக கைதி 2-ம் பிளானில் வைத்திருக்கிறேன்.

அதற்கு அடுத்ததாக விக்ரம் 2, ரோலக்ஸ் கேரக்டரின் கதை ஆகிய படங்களும் இருக்கிறது. இதையெல்லாம் முடித்துவிட்டு லியோ 2 பற்றி யோசிக்கலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் அஜித்துடன் அவர் இணைவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

Also read: எவன் தடுத்தாலும் லியோ 1000 கோடி வசூல் உறுதி.. நண்பா நண்பிசை குஷிபடுத்த எடுத்த கடைசி அஸ்திரம்

இதை லோகேஷ் ஒருமுறை அஜித்தை இயக்க ஆசை என வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார். மேலும் 10 படங்கள் இயக்கிய உடன் சினிமாவை விட்டு விலகுவேன் என்று அவர் தெரிவித்திருந்ததும் இந்த அவசரத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இருப்பினும் சீனியர் இயக்குனர்களின் அறிவுரையின் பெயரில் தற்போது அந்தத் திட்டத்தை லோகேஷ் ஒத்தி வைத்திருக்கிறாராம். அதனால் பத்து படங்களை தாண்டியும் அவர் ரசிகர்களை மகிழ்விப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் லோகேஷ் தரமான சம்பவத்திற்கும் தயாராகி விட்டார்.

Also read: தயங்கிய விஜய், கட்டாயப்படுத்திய லோகேஷ்.. ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

- Advertisement -

Trending News