நெகட்டிவ் கேரக்டரிலும் முத்திரை பதித்த அஜித்தின் 5 படங்கள்.. கேரியரையே மாற்றிய மோசமான வில்லத்தனம்

முன்னணி ஹீரோவாக பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அஜித் நடிகராக மட்டுமில்லாமல் நெகடிவ் கேரக்டர் ஆகவும் வில்லத்தனத்தில் நடிக்க முடியும் என்று இவருடைய முத்திரையை பதித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

பில்லா: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், பிரபு, ரகுமான், நயன்தாரா, நமீதா மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் அஜித் இன்டர்நேஷனல் டானாக இவருக்கென்று கச்சிதமாக பொருந்தக்கூடிய நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். ஒரு நேரத்தில் அஜித்துக்கு எந்த படமும் சரியாக ஹிட் கொடுக்காமல் இருந்த நிலையில் ரஜினியின் வலியுறுத்தலின்படி அவர் நடித்த பில்லா படத்தை ரீமேக் எடுத்து மாஸ் காட்டி நடித்தார். இந்த படம் தான் இவருடைய சினிமா கேரியரில் இந்த அளவுக்கு இவரை தூக்கி விட்டது என்றே சொல்லலாம்.

Also read: ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்..அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமி ராய் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் அஜித்தின் 50வது திரைப்படமாக வெளிவந்தது. இந்தப் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் கச்சிதமாக அவர் போட்ட பிளான் படி மற்றவரை அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றி அந்த பணத்தை எடுத்து கடைசியாக வில்லத்தனமான ஒரு சிரிப்பை காட்டியிருப்பார். இதில் இவரை அடிச்சுக்கிறதுக்கு ஆளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவருடைய எதார்த்தமான நடிப்பு இருக்கும். இப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக வெளிவந்தது. அத்துடன் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

வரலாறு: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வரலாறு திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அசின், கனிகா, சுஜாதா மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்தார். இதில் அப்பா மற்றும் மகன் இரண்டு பேரும் அஜித்தாகவே நடித்து இருப்பார். இப்படத்தில் அப்பா அஜித் அவருடைய நளினம் வித்தியாசமாக இருப்பதால் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொன்ன அவரை வற்புறுத்தி கல்யாணம் செய்து கொள்வார். பின்பு இவருடைய மகனாக இருக்கும் ஒருவர் தன் அப்பா செஞ்ச துரோகத்தால் அம்மாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று அவரை பழிவாங்கும் நோக்கத்தில் நெகட்டிவ்வாக நடித்திருக்கிறார்.

Also read: ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.. அஜித்தின் அறிவிப்பால் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சாம்ராட் அசோகா: சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு அசோகா திரைப்படம் வெளிவந்தது. இதில் ஷாருக்கான், அஜித், கரீனா கபூர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தார். இப்படத்தில் ஷாருக்கானுடன் அஜித் நடித்த முதல் மற்றும் இந்தி திரைப்படம்.

வாலி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்தார்கள். இப்படத்தில் அஜித் அண்ணன் மற்றும் தம்பி என்று இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் அண்ணன் கேரக்டரில் காது கேளாத ஊமையாக நடித்தார். ஆனாலும் நான் பார்த்த பெண்ணே தம்பி திருமணம் செய்து கொண்டதால் வெறித்தனமாக மிகவும் மோசமான வில்லத்தனத்தில் அவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படம் தான் இவருக்கு ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் மிகவும் முன்னுக்கு தூக்கிவிட்ட படம்.

Also read: விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்