பெண்களை மையப்படுத்தி எடுக்கபட்ட 5 படங்கள்.. திருமணத்திற்கு பின்னும் சிங்க பெண்ணாக லேடி சூப்பர் ஸ்டார்

பொதுவாக சினிமாவை பொறுத்தவரையில் ஹீரோக்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த விஷயத்தை முதலில் உடைத்தது பாலச்சந்தர் தான். இதைத்தொடர்ந்து இப்போதும் வலுவான பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வருகிறது. அதில் பெண்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் தந்த 5 படங்களை பார்க்கலாம்.

அறம் : கோபி நயினார் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் அறம். இந்தப் படத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருந்தார். ஒரு பெண்ணின் ஆளுமையை இந்த படத்தில் நயன்தாராவின் மூலம் காண்பிக்கப்பட்டது.

Also Read : நம்பர் ஒன் அது எனக்கு மட்டும்தான், பழைய ஃபார்முக்கு வந்த நயன்தாரா.. அடுத்தடுத்து ரிலீஸாக உள்ள 6 படங்கள்

மாயா : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம். இந்த படத்தில் பிக் பாஸ் ஆரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திகில் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் அப்சரா அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்த அசத்தியிருந்தார். இந்த படத்தில் ஒற்றைத் தாயாக குழந்தையை வளர்க்கவும், வாழ்க்கையை நகர்த்தவும் போராடும் பெண்ணாக நயன்தாராவின் நடிப்பு அபாரம்.

கோலமாவு கோகிலா : நெல்சன் திலீப்குமாரின் அறிமுகப்படமான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் மூத்த மகளான நயன்தாரா தனது தாயின் மருத்துவ செலவு மற்றும் குடும்பத்தைக் காப்பாற்றவும் போராடுகிறார். அதில் வரும் சிக்கலை எதிர்கொண்டு தனது அம்மாவை காப்பாற்றுகிறார்.

Also Read : நயன்தாரா இடத்தை கைபற்றும் ஹீரோயின்.. 2 நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிய மூன்றாவது நாயகி!

36 வயதினிலே : ஜோதிகா திருமணமான பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து நடித்த படம் 36 வயதினிலே. கல்லூரியில் இருந்தே பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் பெண்ணாக வளர்ந்து வந்த வசந்தி திருமணம் ஆன பின்பு குடும்ப தலைவியாக பொறுப்பை சுமந்து வருகிறார். கேலி கிண்டலுக்கு உள்ளாகும் அவர் எல்லாருமே மதிக்கும்படி எப்படி மாறுகிறார் என்பதே 36 வயதினிலே.

யசோதா : சமீபத்தில் சமந்தாவின் துணிச்சலாக நடிப்பில் வெளியான திரைப்படம் யசோதா. அண்மையில் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தை வேறு கோணத்தில் யசோதா படத்தில் விறுவிறுப்புடன் கொடுத்திருந்தார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் திறம்பட சமந்தா நடித்திருந்தார்.

Also Read : குட்டி டிரெஸ்ஸில் கிரங்கடிக்கும் குட்டி நயன்தாரா அனிகா.. தடுமாறும் இளசுகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்